“ஒரு பரிசோதனைக்கு 25 லட்சமாம்.. மெடிக்கல் மாஃபியா நடக்குது.. எனக்கே இப்டினா”.. புலம்பு சூர்யா பட இயக்குநரின் மனைவி..

Spread the love

உணவே மருந்து என வாழ்ந்த காலகட்டம் மாறி தற்போது மருந்தே உணவு என்ற நிலைக்கு மாறிவிட்டோம். நம் தாத்தா பாட்டி காலத்தில் இல்லாத பல நோய்கள் இப்போது சிறு குழந்தைகளுக்கே வந்து கொண்டிருக்கும் சூழலில், மெடிக்கல் மாஃபியாவின் அட்டூழியம் இன்னொரு பக்கம் அரங்கேறி வருகிறது. விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படம் வெளியான போது மருத்துவ துறையை சேர்ந்த பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம், மருத்துவத்துறையில் சாதாரணமாக முழு உடற் பரிசோதனை செய்தாலேயே பல வியாதிகள் இருக்கும் எனக் கூறி காசை சில மருத்துவர்கள் கறந்து விடுவதாக கூறியிருந்தது அப்படம். இதெல்லாம் உண்மையில் நடக்குமா என மக்கள் பலர் சிந்தித்து வந்த நிலையில், இதுபோல் நடப்பது உண்மை தான் என இயக்குநர் விக்ரமனின் மனைவி கூறியிருக்கும் செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

#image_title

பூவே உனக்காக, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் விக்ரமனின் மனைவி ஜெயப்பிரியா ஒரு குச்சிப்புடி நடனக் கலைஞர். நடனமாடிக் கொண்டிருக்கும் போதே திடீரென ஏற்பட்ட முதுகுவலியால் மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சரியான காரணங்கள் எதுவும் சொல்லாமல் மருத்துவம் பார்த்து மருந்து மாத்திரைகள் கொடுத்து சிகிச்சை கொடுத்துள்ளனர். இறுதியில் மருத்துவமனையில் இருந்து அவர் நடக்க முடியாமல் வீல் சேரில் வீடு திரும்பியுள்ளார்.

#image_title

கிட்டத்தட்ட 5 வருடங்கள் படுக்கையிலேயே இருந்து வரும் விக்ரமனின் மனைவி ஜெயப்பிரியா, சமீபத்தில் கொடுத்த நேர்காணல் ஒன்றில் தனக்கு நடந்த மருத்துவ சிகிச்சை குறித்து பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனதளவில் தான் நன்றாக இருப்பதாகவும், ஆனால் தனது கணவர் தான் தன்னுடைய நிலையைக் கண்டு வருத்தப்படுவதாகவும் கூறியுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தப் போது, தனக்கு சிறுநீர் சரியாக செல்லவில்லை என்பதால், ஒரு சிப் வைத்து பரிசோதனை செய்ய சுமார் 25 லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனவும், ஒருவேளை இந்தப் பரிசோதனை தோல்வியடைந்தால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதால், அந்த சிகிச்சையை மேற்கொள்ளவில்லை என ஜெயப்பிரியா கூறியுள்ளார்.

#image_title

தான் ஒரு இயக்குநரின் மனைவி என்பதால் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வார்கள் என எண்ணி தங்களிடம் இருந்து பணம் பறித்ததாகவும், மருத்துவத் துறையில் தற்போது மெடிக்கல் மாஃபியா நடந்து வருவதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். அத்தோடு தனது மகன் தற்போது சினிமாவில் நடிகராக அறிமுகமாக இருப்பதாகவும், அவர் சினிமாவில் நடிப்பதை பார்த்து விட வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும் அவர் தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Archana

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

3 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

3 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

5 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

5 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

5 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

5 மணத்தியாலங்கள் ago