காமெடியனாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்து இப்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சூரி. வெற்றிமாறன் இயக்கத்தில் ரிலீசான விடுதலை திரைப்படத்தின் மூலம் சூரி ஹீரோவாக திரையுலத்தில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சூரியின் கருடன் திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது பி.எஸ் வினோத் இயக்கத்தில் உருவாகும் கொட்டுக்காளி திரைப்படத்தில் சூரி ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் அன்னா பென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயனை எஸ்கே ப்ரொடக்ஷன் இந்த படத்தை தயாரிக்கிறது. சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காலி படம் திரையிடப்பட்டது. வருகிற 23-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது.இன்று கொட்டுக்காளி படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது, நான் கம்பேர் பண்றன்னு நினைக்க வேண்டாம். நான் காலேஜ் படிக்கும்போது விக்ரம் சார் நடிச்ச சாமி, தூள், பிதாமகன் படங்கள் ஒரே வருஷத்தில் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது.
அந்த வருஷம் விக்ரம் சாருக்கு எப்படி ஸ்பெஷலா இருந்துச்சு. அந்த மாதிரி இந்த வருஷம் சூரி அண்ணனுக்கு ஸ்பெஷல். விடுதலை, கருடன், கொட்டுக்காளி. இந்த மூன்று படமும் சூரி அண்ணனுக்கு ஸ்பெஷல். இந்த படத்துக்காக சூரி அண்ணனுக்கு நேஷனல் அவார்ட் கிடைச்சா என்ன விட அதிகமா சந்தோஷப்படுவது வேறு யாரும் இருக்க மாட்டாங்க. இந்த படத்துக்காக சூரி அண்ணனுக்கு விருது கிடைக்கும்னு நான் நம்புறேன். அப்படி முன்ன பின்ன ஆனாலும் வெற்றி சார் சூரி அண்ணனுக்கு அவார்ட் வாங்கி கொடுத்துடுவார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கு.
சூரி அண்ணன் அடுத்து மிஸ்கின் சாரோட படத்துல ஒர்க் பண்ணனும். அதே மாதிரி பாலா சார் படத்துல ஒர்க் பண்ணனும். ஏன்னா சூரி அண்ணா உண்மையிலேயே ரொம்ப ரொம்ப திறமையான நடிகர். அவங்க எல்லாரும் பயங்கரமா நடிக்க சொல்லுவாங்க. நமக்கு அவ்வளவு வராது. ஒரு பேமிலி பேக்கேஜா தான் நமக்கு நடிக்க தெரியும். ஆனா சூரி அண்ணன் என்னை விட இன்னும் நல்ல நடிக்க கூடியவர். இதனால நல்ல இயக்குனர்கள் படத்தில் சூரி அண்ணா வேல பாக்கணும் அப்படின்னு ஆசை என சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.