பிரியாணி என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அனைத்து வயதினருக்கும் சிறியவர் முதல் பெரியவர் வரை அவர் சைவ பிரியராக இருந்தாலும் சரி அசைவ பிரியர்களானாலும் சரி பிரியாணி என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவுதான். எந்த ஒரு விசேஷங்கள் ஆனாலும் பார்ட்டி ஆனாலும் மெனுவில் முதலிடத்தில் இந்த பிரியாணி இடம் பெற்று இருக்கும். ஏன் அனைவருக்கும் எந்த உணவு மிகவும் பிடிக்கும் என்று கேட்டால் அந்த பட்டியலிலும் முதலில் பிரியாணி தான் இடம்பெறும்.
அப்படிப்பட்ட பிரியாணியை சுவையாக வழங்குவதில் ஒரு சில நிறுவனங்கள் சிறப்பாக விற்பனை செய்து வருகிறது. அதில் ஒன்றுதான் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி.ஒரு சாதாரண சாப்பாட்டுக்கடையாக இருந்த தலப்பாக்கட்டி பிரியாணி எப்படி அனைத்து மக்களும் விரும்பக்கூடிய ஒரு பெரும் பிராண்டாக மாறியது என்பதை இந்நிறுவனத்தின் வரலாறை இனி விரிவாக காண்போம்.
ஆரம்பத்தில் வெற்றிலை கடை தொடங்கிய திருநாக சாமி நாயுடு தனது மனைவியின் தனித்துவமான பிரியாணி சுவையை அறிந்த பின்பு நான்கு இருக்கைகள் கொண்ட ஒரு சிறிய ஹோட்டல் திறந்து பிரியாணி விற்பனை செய்ய வேண்டும் என்று விரும்பினார். அதன்படி 1952 ஆம் ஆண்டு ஆனந்த விலாஸ் பிரியாணி சப்பாத்தி ஹோட்டல் என்ற பெயரில் உணவகத்தை தொடங்கிய நாகசாமி நாயுடு அனுபவம் இன்மையினால் அந்த உணவகம் எடுபடாமல் பொருளாதார இழப்புக்கு உள்ளானது. அதனால் உணவகம் மூடப்பட்டது.
அவர் தோல்வியடைந்ததற்கான காரணத்தை ஆராய்ந்து அடிக்கடி பிரியாணி செய்து, மசாலா பொருட்களை மாற்றி சேர்த்து அவர் சாப்பிட்டு திருப்தி அடைந்த பின்னர் மீண்டும் 1957 ஆம் ஆண்டு அதே பெயரில் பிரியாணி கடையை திறந்தார் நாகசாமி நாயுடு. நாகசாமி நாயுடு பிரியாணியின் சரியான செயற்கை உடன் ரகசியமான மூலப்பொருட்களையும் மசாலா பொருட்களில் சேர்த்து வாயில் ஊற வைக்கும் பிரியாணியை தயார் செய்து விற்பனை செய்து வந்துள்ளார். உணவகமும் அவரது பிரியாணியும் பிரபலமானது.
அவர் சமைத்து ருசி பார்த்து எல்லாம் சரியாக இருந்த பின்னரே வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்தார் ஒரு கட்டத்தில் பிரியாணியின் சுவை வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற அந்த நுட்பத்தை தொடர்ந்து பயன்படுத்த தொடங்கினார் அவருடைய வழுக்கை தலையை மறைப்பதற்காக தலைப்பாகை கட்டிக்கொள்வார் அந்த தலைப்பாகையுடன் வாடிக்கையாளருக்கு பரிமாறுவார். அதனால் அவரை தலப்பாக்கட்டு நாயுடு என்று வழக்க தொடங்கினர்.

ஆரம்பத்தில் இருந்தே தன் கடை பிரியாணி தனித்துவமாகவும் சுவையானதாகவும் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்த நாகசாமி நாயுடு தரமான மசாலா பொருட்களை உபயோகித்து சரியான அளவுகளில் சேர்த்து உயர்தர சீரக சம்பா தீயை பயன்படுத்தி பிரியாணி தயாரித்துள்ளார். பறக்கும் சிட்டு என்று அழைக்கப்படும் ஒரு வகை சிறுதானிய சீரக சம்பா அரிசி ஐ தேர்ந்தெடுத்து இவர்கள் பிரியாணி செய்கின்றனர் மேலும் மென்மையான புல்வொன்னும் மாடுகளில் இருந்து வரும் கன்னிவாடி இறைச்சியை தான் பிரியாணிக்கு பயன்படுத்துகின்றனர். அவரது சமையல் சீக்ரெட்டை தனது குடும்ப உறுப்பினர்களுக்கு சொல்லிக் கொடுத்து அதையே பின்பற்றி அன்று முதல் இன்று வரை சுவை மாறாமல் பிரியாணியை கொடுத்து வருகின்றனர்.
தலப்பாகட்டி நாகசாமி நாயுடு 1978 ஆம் ஆண்டு காலமாகிவிட்ட நிலையில் அவரது மகனான என் தனபாலன் மற்றும் பேரனான டி. நாகசாமி ஆகியவரால் தலப்பாக்கட்டி நாயுடு பிரியாணி ஹோட்டல் என்ற பெயரில் நடத்தி வந்தனர். 2013 ஆம் ஆண்டு தலப்பாக்கட்டி பிரியாணி என்ற பிராண்டை உருவாக்கி அது வெற்றிகரமாக நடந்து வருகிறது.

இந்த தலப்பாகட்டி பிரியாணி உணவு சங்கிலி இந்தியாவில் 92 விற்பனை நிலையங்கள் மற்றும் வெளிநாடுகளில் ஒன்பது விற்பனை நிலையங்களுடன் உலக அளவில் 101 மேற்பட்ட விற்பனை நிலையங்களுடன் செயல்படுகிறது இலங்கை துபாய் மலேசியா பிரான்ஸ் சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா போன்ற ஒன்பது வெளிநாட்டு வெளிநாடுகளில் விற்பனை நிலையங்கள் உள்ளன. பிரியாணியை மையமாக வைத்து நடந்து வரும் இந்த உணவகம் மாபெரும் ஹிட் ஆகி இன்றளவும் பிரியாணி என்றால் தலப்பாகட்டி என்ற பெயரையே மக்கள் மனதில் நிலைநாட்டி இருக்கிறது.
ஒரு சாதாரண மனிதன் நான்கு இருக்கைகளை கொண்டு கடையை ஆரம்பித்து தோல்வி அடைந்து மீண்டும் மீண்டும் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து அதில் வெற்றி அடைந்து ஒரு நிறுவனத்தை உருவாக்கி வெற்றியடைந்து இன்று 800 கோடி மதிப்பு கொண்ட ஒரு நிறுவனமாக மாறியிருக்கிறது தலப்பாகட்டி பிரியாணி.
