ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதன் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற உள்ளது. முருகதாஸ் படம் என்றாலே தனி மவுசு உண்டு. முதல் முறையாக முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுத்திருப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் நேற்று படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் நேற்று சென்னையில் டிரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது . அதில் பேசிய சிவகார்த்திகேயன், கோட்’ படத்தின் துப்பாக்கி பகிரும் காட்சியில் விஜய் சார் எனக்கு ஊக்கமளிப்பதாக உணர்ந்தேன். படம் வெளியான பிறகு பலரும் என்னை குட்டி தளபதி, திடீர் தளபதி என்றெல்லாம் அழைத்தனர். இதை நான் ஏற்கவில்லை. அண்ணன் அண்ணன் தான், தம்பி என்றுமே தம்பி தான் என்று பேசியுள்ளார்.
