சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள படத்திற்கு பராசக்தி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதர்வா, ஸ்ரீ லீலா, ரவி மோகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள நிலையில் ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சூர்யாவை நாயகனாக வைத்து சுதா கொங்கரா இயக்க இறந்த திரைப்படம் தான் புறநானூறு. ஆனால் சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து சூர்யா விளக்கியதால் இதனை தொடர்ந்து சிவ கார்த்திகேயன் இந்த படத்தில் இணைந்தார். முதலில் படத்தின் கதை வேறு மாதிரி இருந்த நிலையில் சிவகார்த்திகேயன் இணைந்த பிறகு சுதா கொங்கரா சில மாற்றங்களை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை பச்சையப்பன் கல்லூரியை கதைக்களமாக வைத்து இந்த படத்தின் கதை அமைந்துள்ளது. மாணவர்களை ஒன்று திரட்டி போராட்டத்திற்கு தயார்படுத்தும் சிவகார்த்திகேயன் அவரை கொள்ள வேண்டும் என்று வில்லனாக வரும் ரவி மோகன் என இந்த டைட்டில் டீசர் பரவலாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நடிகர்களை தவிர்த்து இந்த படத்திற்கு மற்றொரு மிகப்பெரிய பலமாக இருக்கப் போகிறவர் தான் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான சூரரை போற்று திரைப்படத்திற்கு இவர் இசையமைத்திருந்தார். இந்த படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.

சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்திற்கும் இவரை இசையமைத்த பாடல்கள் பெரிய அளவில் ஹிட் அடித்தன. தற்போது இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயன் ஜீவி பிரகாஷ் கூட்டணி பராசக்தி படத்தில் இணைந்துள்ளது. இந்த திரைப்படம் குறித்து ஜிவி பிரகாஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசுகையில், சுதா கொங்கராவுடன் இந்த படத்தில் இணைந்ததை மிகுந்த மகிழ்ச்சி. பராசக்தி படத்திற்கு ஏற்கனவே நான்கு பாடல்களுக்கு இசையமைத்து விட்டேன். சுதா கொங்கராவுக்கு மிகவும் தனித்துவமான இசை ரசனை இருக்கிறது. இந்த நான்கு பாடல்களும் சூப்பராக வந்திருக்கின்றன. ரசிகர்களை கட்டாயம் இந்த பாடல்கள் கவரும். நிச்சயமாக இதில் மூன்று பாடல்கள் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று நான் நம்புகிறேன் என ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
