Connect with us

CINEMA

என்னது.., தனுஷுக்கு 25 கோடி, சிவகார்த்திகேயனுக்கு 40 கோடியா..? வளர்த்துவிட்டவரையே வாயடைக்க வைத்த நடிகர் SK ..

பலவிதமான போராட்டங்களுக்கு பிறகு ஒருவழியாக வரும் ஜனவரி 14ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் துவக்கத்தில் இருந்தே பலவிதமான பிரச்னைகள்தான் என்றாலும், ஒவ்வொரு தடைகளாக உடைத்து இந்த படம் இப்போது பொங்கலுக்கு ரிலீஸ் ஆவது உறுதியாகி இருக்கிறது. இந்த படம் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் என்பதற்காக, சம்பளமே வாங்காமல் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இது அவரே வெளிப்படையாக கூறிய தகவல். இந்த படத்தில் நடிப்பதால் கிடைக்கும் சம்பளத்தை விட பெரிய விஷயமாக, ஒரு பொக்கிஷம் போல மதிப்புமிக்க டைரக்டர் ரவிக்குமார் கிடைத்திருப்பதாகவும் சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.

   

இந்நிலையில் வரும் பொங்கலுக்கு அயலான் படம் ரிலீஸ் ஆகிறது. அதே வேளையில், தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படமும் ரிலீஸ் ஆகிறது. சிவகார்த்திகேயன் நடிக்க வந்த ஆரம்பத்தில் பல விதங்களில் தனுஷ் அவருக்கு ஆதரவாக இருந்தார். அவரது முதல் படமான மெரினா படத்தில், ஒரு பாடல் காட்சியில் தோன்றி நடனமாடி கேமியோ ரோல் செய்திருந்தார். ஆனால் நாளடைவில் தனுஷூக்கே போட்டியாளராக சிவகார்த்திகேயன் உருவானதை தனுஷால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்போது தனுஷின் போட்டியாளர் சிம்பு அல்ல, சிவகார்த்திகேயன்தான் என்ற நிலை நீடிக்கிறது.

இந்த சூழலில் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படமும், தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படமும் வரும் 14ம் தேதி தைப் பொங்கல் பண்டிகைக்கு பெஸ்டிவல் படங்களாக ரிலீஸ் ஆகின்றன. இதில் அயலான் படத்துக்கு தமிழ்நாடு தியேட்டர்களில் வியாபாரம் என்பது ரூ 40 கோடியாக உள்ளது. அதுவே தமிழ்நாடு முழுவதும் கேப்டன் மில்லர் படத்துக்கான வியாபாரம் ரூ. 25 கோடியாக மட்டுமே உள்ளது. தனுஷை விடவும், சிவகார்த்திகேயன் நடித்த படத்துக்கு ரூ. 15 கோடி அதிகமாக தியேட்டர் வியாபாரம் நடந்துள்ளது. இது தனுஷ் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top