ஒருவேல ‘இந்தியன் 2’ ஓடலான, எல்லாரும்… கமலை அவமான படுத்திய நடிகர் விஷால்.. கொந்தளித்த ஆண்டவர் ரசிகர்கள்..

By admin on தை 3, 2024

Spread the love

நடிகர் விஷால், தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர். இப்போது ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இனிமேல் 2 கோடி, 3 கோடி ரூபாய் எடுத்துக்கொண்டு யாரும், சினிமா தயாரிக்கலாம் என்று சென்னைக்கு வந்துவிடாதீர்கள் என, சமீபத்தில் மார்க் ஆண்டனி படம் சக்சஸ் மீட்டில் விஷால் பேசியதால் பிரச்னை எழுந்தது.

   

அப்படி என்றால் சின்ன பட்ஜெட் படங்கள் எடுக்கவே கூடாதா, என பலரும் விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மார்க் ஆண்டனி படத்துக்கு இந்தி வெர்சன் வாங்குவதற்காக மும்பை சென்ற விஷால், அங்கு சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக புகார் தெரிவித்தார். ரூ. 6.5 லட்சம் கொடுத்துவிட்டு வந்து வீடியோ வெளியிட்டார். அதுவும் விமர்சனத்துக்கு உள்ளானது.

   

 

இப்போது கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 படம் ஓடாது. அந்த படத்தின் தயாரிப்பாளர், லைகா நிறுவனத்தின் சொத்துக்களை முடக்க வேண்டும் என்று நடிகர் விஷால் கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. லைக்கா தயாரிப்பு நிறுவனத்துக்கும், விஷாலுக்கும் ஜிஎஸ்டி தொடர்பாக பிரச்னை நீடிக்கிறது. இந்நிலையில், இந்தியன் 2 படம் ஓடாவிட்டால், லைகா நிறுவனம் மூட்டை முடிச்சு கட்டிக்கொண்டு சென்றுவிட்டால் என்ன செய்வது என்றும் விஷால் கடுமையாக பேசியிருக்கிறார்.

லைக்கா நிறுவனத்துக்கும், நடிகர் விஷாலுக்கும் பிரச்னை இருந்தால் அதை மட்டுமே பேச வேண்டும். இந்தியன் 2 படத்தின் ஹீரோ உலக நாயகன் கமல்ஹாசன். இந்த படத்தை எடுத்து வருபவர் இயக்குநர் ஷங்கர். ஷங்கர், கமலை பாதிக்கும் வகையில் விமர்சித்து விஷால் பேசியது தவறு என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நடிகர் விஷால், தென்னிந்திய நடிகர் சங்க செயலாளராக இருப்பவர். நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் படத்தை பற்றி, படம் ஓடாது என எதிர்மறையான ஒரு கருத்தை பேசியதும், அதுவும் இயக்குநர் ஷங்கரின் இயக்கும் படம் பற்றி இப்படி எதிர்மறையாக கூறியிருப்பதும் நடிகர் கமல், இயக்குநர் ஷங்கர் இருவரையும் இழிவுபடுத்தும் ஒரு செயல் என சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.