ஆக்ஷன் கிங் நடித்த படமா..? சிவகார்த்திகேயனுக்காக ரிஸ்க் எடுக்கும் வெங்கட் பிரபு.. இந்த ஐடியா ஒர்கவுட் ஆகுமா..?

By admin on ஆனி 12, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இது ராணுவ வீரர் முகுந்த் வரதராஜரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகும். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன்….முதல்வன் பட பாணியில் தயாராகும் கதை!

   

அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அந்த படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

   

முதல்வன் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா

 

இந்த படத்தில் பிரபு, பிரசாந்த், சினேகா, லைலா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் இடம் கதையை கூறிய போது சில மாற்றங்களை கொண்டு வர சிவகார்த்திகேயன் கூறியதாக தெரிகிறது. ஆனால் இப்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன்? - வெளியான லேட்டஸ்ட் தகவல் | nakkheeran

ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்து சூப்பர் ஹிட்டான முதல்வன் திரைப்படம் போலவே வெங்கட் பிரபு இயக்கும் படம் கதைக்களம் இருக்கிறதாம். ஒரு நாள் முதல்வன் கான்செப்டில் ஷங்கர் அந்த படத்தை இயக்கினார். அதேபோல அரசியல் பின்னணி கொண்ட கதையை சிவகார்த்திகேயனுக்காக வெங்கட் பிரபு உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு சிவகார்த்திகேயன் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்னது...அஜித்தின் முதல்வனுக்காக முதலில் புக் ஆனது உலக நாயகனா.. அவர் ஏன் நடிக்கலை தெரியுமா? | Kamal refused to act in the muthalvan film..