பிரபல இயக்குனரான துரை செந்தில்குமார் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தார். இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு ரிலீசான எதிர்நீச்சல் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தனது பயணத்தை ஆரம்பித்தார். இதில் சிவகார்த்திகேயன் பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்தனர். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது.

கடந்த 2014-ஆம் ஆண்டு செந்தில் குமாருக்கு சிறந்த குழுவினருக்கான விஜய் விருது வழங்கப்பட்டது. அடுத்ததாக துரை செந்தில்குமார் சிவகார்த்திகேயனை வைத்து கடந்த 2015-ஆம் ஆண்டு காக்கி சட்டை படத்தை இயக்கினார். இந்த படமும் சிவகார்த்திகேயனின் தாய் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. கடைசியாக சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோரை வைத்து துரை செந்தில்குமார் கருடன் படத்தை இயக்கினார்.

இந்த படம் சூப்பர் ஹிட் ஆகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக லெஜண்ட் சரவணனை வைத்து துரை செந்தில்குமார் தனது அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே சரவணன் நடிப்பில் தி லெஜெண்ட் திரைப்படம் உருவானது. ஆனால் எதிர்பார்த்த அளவு அந்த படம் வெற்றி பெறவில்லை.

சரவணன் தனது அடுத்த படத்திற்காக பல கதைகளை கேட்டு வருவதாக கூறப்பட்டது. இப்போது துரை செந்தில்குமார் கூறிய கதைக்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சிவகார்த்திகேயன் சூரி ஆகியோருக்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த துரை செந்தில்குமார் லெஜன்ட் சரவணன் வைத்து இயக்கும் படம் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

