தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் டி இமான். முதன்முதலாக விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் திரைப்படத்தில் இவர் இசையமைத்திருந்தார். இதைத்தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா போன்ற திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்து இருக்கின்றார்.
சிவகார்த்திகேயன் மற்றும் டி. இமான் இருவரின் காம்போவில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் ஹிட்டுக் கொடுத்துள்ளது. ஆனால் இருவரும் கடந்த சில வருடங்களாக பேசிக்கொள்வதில்லை. நல்ல நண்பர்களாக இருந்த இவர்கள் பிரிய காரணம் என்ன என்பதை பற்றி சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த டி இமான் பேசி இருந்தார்.
அதில் அவர் ‘சிவகார்த்திகேயன் செய்த துரோகத்தை என்னால் மன்னிக்க முடியாது .அதை தன்னால் வெளியில் சொல்ல முடியாது. அப்படி கூறினால் எனது குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும். அவரை மன்னித்தாலும், அவர் செய்த துரோகத்தை நான் கட்டாயம் மறக்கவே மாட்டேன்.’ என்று ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டார். இணையமே இந்த விவகாரத்தால் பற்றி எரிந்தது.
ஆனால் இந்த சர்ச்சை குறித்து தற்பொழுது வரை எந்த விளக்கமும் அளிக்காமல் சிவகார்த்திகேயன் மௌனம் காத்தே வருகிறார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டியளித்த பழைய வீடியோ ஒன்றை தற்பொழுது நெட்டிசன்கள் வைரலாகி வருகின்றனர். அதில் சிவகார்த்திகேயன் ‘இமானை அண்ணன் என்றே கூப்பிடுவேன். அவர்களின் குடும்பத்தில் ஒருவனாக மாறிவிட்டேன்.
இமானின் மனைவியை அண்ணி அண்ணி என்றே அழைப்பேன். என்ன கொழுந்தனாரே என்னை டார்ச்சர் பண்றீங்க..? என செல்லமாக கோபப்படுவார். அவரின் குழந்தை என்னை சித்தப்பா என்றுதான் கூப்பிடுவாள். எங்களுக்குள் ஒரு நல்ல உறவு இருந்தது” என பேசியிருந்தார். இந்த பழைய வீடியோவை கட் செய்து தற்பொழுது நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
அண்ணி அண்ணின்னு சொல்லி வெச்சிட்டியேடா சு???????????????????? @Siva_Kartikeyan Thu????#D51 pic.twitter.com/ZwWanvn80t
— Singamdfan (@Yuvaraj07309839) February 4, 2024