சொந்த பணம் 30 கோடியை கொடுத்தும் தீராத பிரச்னை.. ‘அயலான்’ படத்தால் சிக்கலில் சிவகார்த்திகேயன்..

By Sumathi

Updated on:

சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படம், நாளை ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல இந்த படம் காலை 9 மணிக்கு ரசிகர் காட்சியுடன் துவங்குகிறது. பொங்கல் பண்டிகைக்கு இந்தமுறை தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படமும், சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படமும் நேருக்கு மோதுகிறது. முதலில் கேப்டன் மில்லர் படம் குறித்த பெரிய எதிர்பார்ப்பு இல்லை என்றாலும், டிரெய்லர் வந்த பிறகு ரசிகர்களின் அதிக கவனத்தை படம் ஈர்த்துள்ளது. அதனால் அயலான் படத்தை விட கேப்டன் மில்லர் படத்துக்கு தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங் அதிகரித்துள்ளது.

   

அயலான் படத்தின் பட்ஜெட்டை விட செட்டில் செய்ய வேண்டிய தொகை அதிகமாக உள்ளது. நிறைய பப்ளிசிட்டி படம் வராமல் போனால் சிவகார்த்திகேயனுக்குதான் கெட்ட பெயர். மதுரை அன்பு மூலமாக, 30 கோடி ரூபாய் தனது சொந்த பணத்தை கொடுத்து சிவகார்த்திகேயன் அயலான் படத்தை வெளியிடுவதற்கான முயற்சியை செய்து வருகிறார். சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ் ஆகும்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் ஏதேனும் பிரச்னை ஏற்படுவதாக தொடர்கிறது.

 

கூட்டமைப்பு சார்பில் நிர்ணயித்துள்ள இந்த தொகை என்பது வட்டியில்லாதது. இதுவே வட்டி என சேர்ந்தால் 100 கோடி, 200 கோடி என எகிறிக்கொண்டு போகும் எனக் கூறப்படுகிறது. ஆனால் எப்படியாவது அயலான் படத்தை தனது சொந்த பணம் 30 கோடி ரூபாயை கொடுத்தாவது வெளியிட வேண்டும். தனது ரசிகர்கள் இந்த படத்தை காண வேண்டும் என நடிகர் சிவகார்த்திகேயன் மிகவும் ஆசைப்படுகிறார். ஆனால் நாளை, ( 12ம் தேதி) சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ் ஆகுமா, ஆகாதா என்பதே குழப்பமாக இருக்கிறது.

author avatar
Sumathi