சர்வதேச திரைப்பட விழாவில் சூரி படத்துக்கு கிடைத்த பாராட்டு மழை..! உச்சகட்ட சந்தோஷத்தில் SK..

By Ranjith Kumar on மாசி 29, 2024

Spread the love

தவிர்க்க முடியாத ஒரு முன்னனி கதாநாயகனாக வளம் வந்து கொண்டிருக்கும் சூரிய அவர்களுக்கு கொட்டு காளி படத்திற்காக பெர்லின் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் அவார்ட் வழங்கப்பட்டுள்ளது. அதை பெருமிதம் கொண்டு சிவகார்த்திகேயன் அவர்கள் தன் புரொடக்ஷன் கம்பெனிய இணையதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட “கொட்டுக்காலி” படம், சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன் கம்பெனி எஸ்.கே ஃபிலிம் ப்ரொடக்ஷன் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்து “பி.எஸ் வினோத் ராஜ்” அவர்கள் இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சூரியன் மற்றும் அன்னா பென் அவர்களின் நடிப்பில் வெளியாகி திரைக்கு வர உள்ள படம் தான் இது, தமிழகத்தில் திரையிடுவதற்கு முன்னாலே பல இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் தேர்வாகியுள்ளது,

   

அதில் முக்கியமாக 74 ஆவது பெர்லின் உள்ள (பெர்லின் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல்) விழாவில் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி அன்று இப்படம் ஒளிபரப்பானது, இதைக் கண்ட ரசிகர்கள் வியந்து உச்சி முகர ஆரம்பித்து விட்டார்கள். இப்படத்தை இயக்கிய வினோத் அவர்களுக்கும் நடித்த சூரியன் மற்றும் அன்னா பென் அவர்களுக்கும் பாராட்டு மலையில் குவிந்த வண்ணமாக கொடுத்தார்கள். இப்படம் முடிந்தவுடன் 10 நிமிடம் நிற்காமல் கைத்தட்டி இந்த படத்திற்கான விருதை அவர்கள் கரகோசத்தின் மூலம் கொடுத்தார்கள்.

   

தற்போது தமிழகத்தில் இப்படம் மூலம் சூறிக்கும் இயக்குனருக்கும் பெரிய கௌரவமே கிடைத்திருக்கிறது என்று கூறலாம். பெர்லினில் நடந்த திரைப்பட விழாவில் இப்படம் ஒளிபரப்பப்பட்ட போது அதற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் இப்படத்திற்கு கிடைத்த பாராட்டுகளையும் பதிவு பண்ண வீடியோவை சிவகார்த்திகேயன் அவர்கள் தனது எஸ்கே ப்ரோடுக்ஷன் கம்பெனி இணையதளத்தில் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.