Sk 21 படத்தை ராஜ்குமார் பெரியசாமி அவர்கள் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும், சாய்பல்லவி ஹீரோயின் மேலும் பிரபலமான ராகுல் போஸ், லல்லு ,ஸ்ரீகுமார் இவர்களின் நடிப்பில் G.V பிரகாஷ் இசை அமைத்து ராஜ் கமல் ஃபிலிம் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் டைட்டிலை நாளை வெளியிடுவதாக ராஜ்கம்மல் ஃபிலிம் ஆபீஸியல் ஆக அறிவித்திருக்கிறார்கள்.
இப்படத்தை முழுக்க முழுக்க ஆர்மி களத்தில் போர் புரியும் காலகட்டத்தில் ஒரு ஆர்மி வீரனாக சிவகார்த்திகேயன் அவர்கள் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இப்படம் கதை முழுக்க ராணுவ போர் சம்பந்தப்பட்ட கதை என்பதால், இப்ப படத்தின் கதை நம் நாட்டின் ராணுவ வீரனான மேஜர் ஒருவரை தழுவி எடுக்கப்பட்டுள்ளது, முன்னாள் மறைந்த மேஜர் முகுந்தன் வரதராஜன் அவர்களின் முன்னாள் ஆர்மி களத்தில் போரை கையாண்ட யுக்திகளை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்படுகிறதாம். இவர் யார் என்றால்,மேஜர் முகுந்த் வரதராஜன் ஏ.சி இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்தார்.
ஜம்மு-காஷ்மீரின் சோபியான்மாவட்டத்தில் நடந்த ஒரு மோதலில் மூன்று பயங்கரவாதிகளைக் கொன்றதற்காக, 2014 ஆம் ஆண்டில், இந்தியாவின் மிக உயர்ந்த அமைதிக்கால துணிச்சலான அசோகச் சக்கரம் விருது இவருக்கு மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது. ஆதலால் இப்படத்தில் வரும் அனைத்தும் உண்மை சம்பவமாக இருப்பதால், மறைந்த மேஜர் முகுந்தன் வரதராஜன் அவர்கள் முன்னாள் ராணுவத்தில் இருந்த பொழுது எப்படி அறிவித்திடனாகவும் உடல் வலிமையாகவும் போர்க்களத்தை சந்தித்து யுக்தியால் வென்றிருப்பாரோ, அதை போல் இப்படத்தில் வரும் சிவகார்த்திகேயன் அவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது உண்மைச் சம்பவம் என்பதால் இப்படத்தில் வரும் அனைத்தும் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக சிவகார்த்திகேயன் அவர்கள் தன்னையே உடலை வருத்தி செதுக்கி கொண்டிருக்கிறாராம்.
