விஜய் டிவியில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தனது திரை வாழ்க்கையை தொடங்கிய சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்து விட்டார். சின்னத்திரை மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்து பிறகு வெள்ளி திரையில் இன்று கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நட்சத்திரம் தான் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்புக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அடிமை. இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் அமரன். மேஜர் முகுந்து வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அமரன் திரைப்படம் உலக அளவில் வசூலில் சக்க போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி கூட இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனை அழைத்து பாராட்டு இருந்தார். இப்படத்தில் சாய் பல்லவியின் நடிப்பும் ரசிகர்களை கவர்ந்து விட்டது. சிவகார்த்திகேயனின் சினிமா பயணத்தில் இந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த எந்த ஒரு திரைப்படத்திற்கும் கிடைக்காத வரவேற்பு இந்த திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.

இந்த திரைப்படம் கடந்த மூன்று நாட்களில் மட்டும் உலக அளவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் இதுவரை நடித்த படங்களில் உலக அளவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படங்கள் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

முதலில் சிவகார்த்திகேயனின் 100 கோடி வசூல் செய்த திரைப்படம் என்றால் அது டாக்டர் திரைப்படம் தான். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்த திரைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த நிலையில் உலக அளவில் 102 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக அறிமுக இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் தான் டான். இந்தத் திரைப்படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்த நிலையில் அதில இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே ரசிகர்களை கவர்ந்து விட்டன. படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இந்த திரைப்படம் உலக அளவில் 105 கோடி வரை வசூல் செய்திருந்தது. டாக்டர் மற்றும் டான் ஆகிய திரைப்படங்களின் வரிசையில் தற்போது அமரன் திரைப்படம் மூன்றே நாளில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த திரைப்படம் கண்டிப்பாக 200 கோடியை பாக்ஸ் ஆபிஸில் கடந்து விடும் என்று திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
