எம். ஆர். ராதாவை வம்பிழுத்த சிவாஜி கணேசன்… ஒற்றை செயலால் வாயடைக்க வைத்த எம். ஆர். ராதா…

By admin on ஆவணி 7, 2024

Spread the love

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் நடிகர் எம் ஆர் ராதா. இவரின் முழு பெயர் மெட்ராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் என்பதாகும். இவர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகர், வில்லன் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார். பெரியார் ஈ வி ராமசாமியால் ‘நடிகவேள்’ என்ற பட்டத்தை பெற்றவர் எம் ஆர் ராதா.

தனது பத்து வயதில் இருந்தே நாடக நிகழ்ச்சியில் நடிக்க தொடங்கியவர் எம் ஆர் ராதா. கிட்டத்தட்ட 5000க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் நடித்த பிரபலமான நாடக கலைஞர் எம் ஆர் ராதா. ‘ரத்த கண்ணீர்’ படத்தின் வெற்றியின் மூலம் பிரபலமானவர் எம் ஆர் ராதா. சமூக பிரச்சனைகளுக்கும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக படங்களில் பேசியவர் எம். ஆர். ராதா.

   

இவரின் பேச்சுத்திறமைக்கும் யார் என்ன பேசினாலும் எதிராக நக்கலாக கவுண்டர் கொடுக்கும் விதத்திற்காகவுமே பிரபலமானவர். 1960களில் அவருக்காகவே பிரத்தியேக வேடங்களை படங்களில் இயக்குனர்கள் உருவாக்கி நடிக்க வைத்தனர். எம்ஜிஆர், சிவாஜி கணேசன் போன்ற நடிகர்களுக்கு பெரும்பாலான திரைப்படங்களில் வில்லனாக நடித்தவர் எம் ஆர் ராதா.

   

 

எம் ஆர் ராதா இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழும் ராதாரவி, ராதிகா மற்றும் நிரோஷா ஆகியோரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சராக இருந்த எம் ஜி ஆர் அவர்களை எம் ஆர் ராதா துப்பாக்கியால் சுட்டதன் மூலம் பெரும் சர்ச்சையில் சிக்கி சிறை சென்றவர். இவர் துப்பாக்கியால் சுட்டதில் எம்ஜிஆர் அவர்களின் குரல் வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்பட்டது.

எம் ஆர் ராதா பட சூட்டிங் வந்தாலே இவரிடம் பேசவே அனைவரும் தயங்குவர். ஏனென்றால் யார் எதை பேசினாலும் அதற்கு ஒரு எதிர் கவுண்டர் தயாராகவே வைத்திருப்பார் எம் ஆர் ராதா. அப்படி ஒரு நாள் ஏவிஎம் ஸ்டுடியோவில் ஷூட்டிங் நடைபெற்றது. அது ஒரு சிவாஜி கணேசன் படம் ஆகும். சிவாஜி கணேசன் அன்றைய சூட்டிங் க்கு அன்றைய காலகட்டத்தில் விலை உயர்ந்த காரண ப்ளைமோத் காரில் வந்திருந்தார்.

எம் ஆர் ராதாவின் காட்சிகள் முன்னதாகவே படம் பிடித்து முடிக்கப்பட்டு விட்டதால், எம் ஆர் ராதா சிவாஜியின் காரில் சாய்ந்து நின்று இருக்கிறார். அப்போது சூட்டிங் முடித்து வந்த சிவாஜி அவர்கள் எம் ஆர் ராதாவிடம் அண்ண உங்க கலர் கார்ல ஒட்டிட போது அப்படின்னு வம்பு இழுத்து இருக்கிறார். எப்போதும் கவுண்டர் செய்யும் எம் ஆர் ராதா அன்றைக்கு ஒன்னும் பேசாமல் அமைதியாக சென்று இருக்கிறார்.

மறுநாள் சிவாஜி கணேசன் வைத்திருந்ததைப் போலவே ஒரு ப்ளைமோத் காரை வாங்கி அதில் உள்ள பாடியெல்லாம் கழற்றி விட்டு அதில் வைக்கோல் போர் ஒரு மாடு எல்லாவற்றையும் ஏத்திக்கொண்டு ஏவிஎம் ஸ்டுடியோக்கு வந்திருக்கிறார் எம் ஆர் ராதா. அதை பார்த்து சிவாஜி கணேசன் என்னன்ன காரை இப்படி பண்ணி வச்சிருக்கீங்க என்று கேட்க, இது என்னப்பா வெறும் பொருள் தானே இதுல என்ன வேணாலும் செய்யலாம், எது வேணாலும் வைக்கலாம், மாடு ஏரலாம், மனுஷனும் ஏறலாம் அப்படின்னு முதல் நாள் சிவாஜி கணேசன் சொன்னதுக்கு பதில் அளிக்கும் விதமாக மறுநாள் செயலில் செய்து காட்டியிருக்கிறார். எம்.ஆர். ராதா. அதை கண்ட சிவாஜிகணேசன் உங்ககிட்ட பேசி ஜெயிக்கவே முடியாது தெரியாம உன்கிட்ட வம்பு இழுத்துட்ட என்று சொல்லி வாயடைத்து போய்விட்டார் சிவாஜி கணேசன்.