பிரபல நடிகரான சூர்யா கடந்த 1997-ஆம் ஆண்டு ரிலீசான நேருக்கு நேர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு காதலே நிம்மதி, பூவெல்லாம் கேட்டுப்பார், ஃபிரண்ட்ஸ், நந்தா, உன்னை நினைத்து, மௌனம் பேசியதே, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ரஜினி, சில்லுனு ஒரு காதல், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கஜினி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அசின் நடித்துள்ளார். நயன்தாரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் கஜினி திரைப்பட ஷூட்டிங்கில் என்பது நடந்த சுவாரஸ்யமான அனுபவம் குறித்து ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, கஜினி படத்தோட ஒரு சீன்ல மழை பெய்யும்.

அப்போ நயன்தாரா சூர்யா கிட்ட நீ தேடிக்கிட்டு இருக்க ஆள் இவன்தான் அப்படின்னு சொல்லுவாங்க. ஏ.ஆர் முருகதாஸ் எல்லாரும் இருந்தாங்க நாங்க 2 சீன் எடுத்து முடிச்சிட்டோம். அது கொஞ்சம் எமோஷனலான சீன். அந்த சீன்ல நயன்தாரா கொஞ்சம் கிளாமரா டிரஸ் போட்டு இருந்தாங்க. அப்புறம் சூர்யா சார் பார்த்துட்டு நயன்தாரா போட்டிருக்க டிரஸ் சரி இல்ல. கொஞ்சம் கன்ஃபியூசா இருக்கும். இது ஒரு எமோஷனலான சீன்.

இப்படி டிரஸ் பண்ணா அது நல்லா இருக்காது. அத மாத்த சொல்லுங்க அப்படின்னு சூர்யா சார் சொன்னாரு. ஆடியன்ஸ் பக்கத்துல இருந்து ஃபுல் ஃபோக்கஸ்டா சூர்யா சார் பார்த்து சொன்னாரு. அது ஒரு அருமையான விஷயம். அப்பவே இது மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் எனக்கு தெரியும். சூர்யா சார் சொன்ன மாதிரி நயன்தாரா டிரஸ் மாத்திட்டு வந்தாங்க. அந்த சீனையும் எடுத்தோம். சீன் படம் பிரமாதமா வந்துச்சு என்ன கூறியுள்ளார்.

#image_title
