நூர்ஜஹான் வேடத்தில் சிவாஜி கணேசனை சைட் அடித்த ரசிகர்கள்… அதைப் பார்த்த ஒருவர் செய்த செயலால் திசைமாறிய நடிகர் திலகத்தின் வாழ்க்கை!

By vinoth on ஆவணி 6, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கணேசனாக நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த போது அவர் நடித்த பல நாடகங்கள் தமிழகத்தின் பல மூளைகளில் அரங்கேறி கணேசன் (அப்போது சிவாஜி என்ற பட்டம் கொடுக்கப்படவில்லை) புகழைப் பரப்பின.

சிவாஜி கணேசன் நாடகக் கம்பெனியில் சேர்ந்ததே ஒரு சுவாரஸ்யமான சம்பவம்.  இதுபற்றி அவரே ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். அதில் “எங்கள் ஊரில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் போடுவார்கள். அதைப் பார்க்கும் போது எனக்கும் நடிக்க வேண்டும் என ஆசை வந்துவிட்டது. அதனால் நான் நாடகக் கம்பெனிக்கு சென்று அப்பா அம்மா இறந்துவிட்டார்கள் என சொல்லி சேர்ந்துவிட்டேன். அதிலிருந்து 6 வருடங்கள் நான் என் பெற்றோரைப் பார்க்கவேயில்லை. ஒரு வேளை நான் இறந்துவிட்டேன் எனக் கூட அவர்கள் நினைத்திருப்பார்கள்” எனக் கூறியுள்ளார்.

   

சிறுவனாக நாடக உலகில் நுழைந்த கணேசன் வாலிப வயதை எட்டியதும் பெண் வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் நடித்த நாடகங்களில் ஒன்றுதான் நூர்ஜஹான். அந்த நாடகத்தில் கதைநாயகியான நூர்ஜஹான் கதாபாத்திரத்தில் பெண் வேடமிட்டு நடித்தவர் கணேசன்தான்.

   

அப்படி அவர் நடித்த போது அவரின் அழகிய தோற்றத்தையும், நளினமான நடிப்பையும் பார்த்து பலர் அவரை சைட் அடிப்பார்களாம். அப்படி அந்த நாடகத்தைப் பார்த்து வியந்தவர்களில் ஒருவர்தான் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள். பலமுறை அந்த நாடகத்தைப் பார்த்த பெருமாள், தான் ஒரு படம் எடுத்து அதில் கண்டிப்பாக இவரை ஹீரோவாக போடவேண்டும் என நினைத்தாராம்.

 

அப்படி அவர் எடுத்த முடிவுதான் பராசக்தி படத்தில் சிவாஜியை ஹீரோவாக்கியது. அந்த படத்தை ஏவிஎம் பிக்சர்ஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்தார் பெருமாள். அந்த படத்தில் சிவாஜியை போடவேண்டாம் என எவ்வளவோ எதிர்ப்புகள் வந்தபோதும், அவர் சிவாஜியை மாற்றவேயில்லையாம்.