#image_title
தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கணேசனாக நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த போது, அவரை பராசக்தி படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார். கருணாநிதி கதை வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் படம் வெளியாகி அதுவரை காணாத வெற்றியைப் பெற்றது.
அந்த படம் அவருக்கு மட்டும் திருப்புமுனையாக அமையாமல் தமிழ் சினிமாவுக்கே ஒரு ட்ரண்ட் செட்டராக அமைந்தது. அதன் பின்னர் அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. 25 ஆண்டுகளுக்கும் மேல் கதாநாயகனாகவு, அதன் பிறகு 20 ஆண்டுகள் குணச்சித்திர நடிகராகவும் கலக்கினார்.
#image_title
அப்படிப்பட்ட சிவாஜிக்கு நடிப்புக்காக ஒருமுறை கூட தேசிய விருது வழங்கப்படவில்லை. அதற்குக் காரணமாக சொல்லப்பட்டது, சிவாஜி கணேசன் ஒரு ஓவர் ஆக்டிங் நடிகர் என்ற விமர்சனங்கள்தான். தேசிய விருது குழுவில் இருக்கும் ஜூரிகளுக்கு சிவாஜி நடிப்பு பற்றி இத்தகைய ஒரு விமர்சனம் இருந்ததாக எழுத்தாளரும் நடிகருமான பாரதிமணி தன்னுடைய புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். இதே கருத்தைதான் எம் ஜி ஆர் ரசிகர்களும் சிவாஜி மேல் ஒரு குற்றச்சாட்டாக வைத்தனர்.
ஆனாலும் சிவாஜிக்கு வெறித்தரமான ரசிகர்கள் அவரது மறைவுக்குப் பின்னரும் இப்போது வரை இருக்கிறார்கள். அவரின் படங்கள் ரி ரிலீஸ் ஆகும்போதெல்லாம் அதைக் கொண்டாடி மகிழ்கின்றனர். சிவாஜியின் ரசிகர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால் தங்கள் ஆதர்சமான அவரின் படத் தலைப்புகளைக் கூட பிறநடிகர்களின் படங்களுக்கு வைக்க அனுமதிக்காத அளவுக்கு சிவாஜி மேல் அன்பு கொண்டவர்கள்.
தனுஷ் நடிப்பில் உருவான ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்துக்கு முதலில் திருவிளையாடல் என்றுதான் டைட்டில் வைக்கப்பட்டது. ஆனால் சிவாஜி ரசிகர்களின் எதிர்ப்பால் பெயர் மாற்றப்பட்டது. அதே போல விக்ரம்மின் படத்துக்கு தெய்வமகன் என்று டைட்டில் வைக்கப்பட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘தெய்வத்திருமகள்’ என்று டைட்டில் மாற்றப்பட்டது. அதேபோல தனுஷின் கர்ணன் படத்துக்கு அந்த டைட்டில் வைக்கப்பட்டபோதும் எதிர்ப்பு எழுந்தது. ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் தாணு பிரச்சனைகளை சமாளித்து அதே டைட்டிலோடு படத்தை வெளியிட்டார்.
டார்ஜிலிங்கைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தான் காதலித்த பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு இருவரும் தங்களது…
அரசுப் பள்ளியா அல்லது தனியார் பள்ளியா என்ற குழப்பம் பல நடுத்தரக் குடும்பங்களை வாட்டும் ஒரு பொதுவான கேள்வி. உங்கள்…
மும்பையில் விஐபி வாகனம் செல்லும் போது போக்குவரத்து காவலர்களால் மிதிவண்டி ஓட்டுநர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அவமரியாதை குறித்து சிவசேனா…
நேபாளத்தில் ஏற்பட்ட கொடூரமான வெள்ளப் பேரழிவிற்குப் பிறகு, பல நாட்களாகக் காணாமல் போன மனைவி உயிருடன் மீண்டு வந்து கணவரிடம்…
சிவானி தனது கணவனின் வீட்டில் தனது காதலரான பாஜக இளைஞர் தலைவர் புஷ்பேந்திர லோதியை ரகசியமாகச் சந்திக்க அழைக்க, அவரும்…
கொளத்தூர், அன்னை சத்ய நகரைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளி சரண்ராஜ் (36), தனது மனைவி முத்துவாரியம்மாளை (38) திங்கட்கிழமை இரவு…