சிவாஜிக்கு அழியாப்புகழைப் பெற்றுத்தந்த கதாபாத்திரங்களை எல்லாம் உருவாக்கியவர் இவரா? வியட்நாம் வீடு சுந்தரம் பற்றி பலரும் அறியாத தகவல்!

By vinoth on ஜூன் 21, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக இருந்தவர் கே சுந்தரம். இவரை வியட்நாம் வீடு சுந்தரம் என்று அழைப்பார்கள். இவர் நடிகராக மட்டுமின்றி இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் என பல திறமைகளை கொண்டவர். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

இவர் ஒரு இயக்குனராக பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் முன்னணி நடிகர்களான எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். வெள்ளித் துறையில் மட்டும் இன்றி சின்னத்திரையிலும் கால் பதித்து உச்சத்தை தொட்டவர்.

   

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல நாடகத் தொடர்களுக்கு இயக்குனராகவும், நடிகராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். 2016ல் வயது முதிர்ச்சியின் காரணமாக தன்னுடைய 76 வயதில் இயற்கை எய்தினார்.

   

சுந்தரம் சினிமாவுக்கு வந்ததே ஒரு எதிர்பாராத விபத்துதான். தான் எழுதிய ஒரு நாடகத்தை தனது பக்கத்து வீட்டுக்காரரிடம் சொல்லியுள்ளார். அதைக் கேட்டு வியந்த அவர் அதை சிவாஜியிடம் சொல்லியுள்ளார். சிவாஜியிடம் ஆடிட்டராக பணியாற்றியவர் அவர். அந்த கதையைக் கேட்ட சிவாஜி, இன்னும் டெவலப் செய்ய சொல்லியுள்ளார். அப்படி அவர் உருவாக்கிய கதைதான் வியட்நாம் வீடு.

 

அந்த கதையை மேடை நாடகமாக்கிய போது பிரஸ்ட்டீஜ் பத்மநாபன் என்ற கதாபாத்திரத்தில் சிவாஜியே நடித்தார். நாடகம் சூப்பர் ஹிட் ஆக, அதுமுதல் ‘வியட்நாம் வீடு’ சுந்தரம் என அழைக்கப்பட்டார். அதுமுதல் சிவாஜியோடு இணைந்து ஞான ஒளி மற்றும் கௌரவம் என நிறையப் படங்களில் பணியாற்றினார். சிவாஜி என்றால் நியாபகம் வரும் பாரிஸ்டர் ரஜினிகாந்த் உள்ளிட்ட கதாபாத்திரங்களை உருவாக்கியவர் சுந்தரம்தான்.

கௌரவம் படத்தின் போது சுந்தரம் மீது கொண்ட அன்பால் ‘இந்த படத்தை நீயே இயக்கி தயாரிச்சுருடா’ என சொல்லி அவரைத் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் ஆக்கியுள்ளார். அந்த படமும் வெளியாகி சூப்பர் ஹிட்டாக, முன்னணி இயக்குனராகவும் மாறினார் சுந்தரம்.