ஒரு வாரத்துல ப்ரொபோஸ், ஒரு மாசத்துல கல்யாணம்.. காதல் கதையை 4 வரிகளில் சொல்லி முடித்த விஜய் சேதுபதி..!

By Mahalakshmi on ஜூன் 21, 2024

Spread the love

நடிகர் விஜய் சேதுபதி தனது காதல் திருமணத்தை குறித்து நான்கே வரிகளில் பேசி முடித்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இந்த கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன் என்றெல்லாம் இல்லாமல் ஹீரோ வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் வயதான தோற்றம் என வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து மக்கள் மத்தியில் அசைக்க முடியாத ஒரு இடத்தைப் பெற்று இருக்கின்றார்.

   

   

அதனாலே ரசிகர்கள் பலரும் இவருக்கு மக்கள் செல்வன் என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலமாக தனது சினிமா பயணத்தை தொடங்கிய விஜய் சேதுபதி அதற்கு முன்பு பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்திருக்கின்றார். பின்னர் பீட்சா, சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், விக்ரம் வேதா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

 

கடந்த சில வருடங்களாக வில்லின் கதாபாத்திரத்தில் நடித்து அசதி வந்த விஜய் சேதுபதி ஹீரோவை காட்டிலும் வில்லனாக மிகவும் பிரபலமானார். ஜவான் திரைப்படத்திற்கு பிறகு இனி வில்லனாக நடிக்க மாட்டேன் என்று கூறிய விஜய் சேதுபதி தற்போது கடைசியாக மகாராஜா திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில் திரையரங்குகளில் சக்க போடு போட்டு வருகின்றது.

மகாராஜா திரைப்படத்தில் மகாராஜாவாகவே கலக்கியிருக்கின்றார் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பை பார்த்து பலரும் வியந்து போய் இருக்கிறார்கள். இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரபல youtube சேனலுக்கு பேட்டி அளித்து வருகின்றார். விஜய் சேதுபதி அதில் தனது வாழ்வில் நடந்த பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றார். இதில் உங்களின் காதல் திருமணம் பற்றி கூறுங்கள் என்று தொகுப்பாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்திருந்தார் விஜய் சேதுபதி.

எனது காதல் கதை மிகவும் சுருக்கமானது. நான் பல பெண்களை காதலித்து இருக்கின்றேன் ஆனால் அந்த பெண்களுக்கு தெரியாது நான் காதலித்தது. என் மனைவியை பார்த்தேன் பார்த்த ஒரு வாரத்திலேயே அவரிடம் காதலை கூறிவிட்டேன். அவரும் சம்மதம் தெரிவிக்க அடுத்த இரண்டு வாரங்களில் எனது வீட்டில் சொன்னேன். என் வீட்டில் இருப்பவர்கள் என்னை ஆச்சரியமாக பார்த்தார்கள்.

பிறகு இரு விட்டாரும் அமர்ந்து பேசினார்கள், பின்னர் ஒரு மாதத்திற்குள் திருமணம் முடிந்து விட்டது. எல்லாமே கடகடவென முடிந்து விட்டது நான் காதலிக்கிறேன் என்ற ஆசிரியத்தில் இருந்து வெளியில் வருவதற்கு முன் திருமணமே முடிந்து விட்டது என்று பேசி இருந்தார். தனது காதல் கதையை நான்கே வரிகளில் கூறிவிட்டார் விஜய் சேதுபதி.