10 லட்சம் தராவிட்டால் வீடியோ லீக்… தம்பி முறை கொண்ட சிறுவனுடன் எல்லை மீறிய பெண்… ஹோட்டலில் நடந்த பகீர் சம்பவம்…!!!

By Rajeshwari on சித்திரை 10, 2026

Spread the love

நைனிடாலில் 9-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது நண்பனின் அண்ணியால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் சிறுவனை சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி நைனிடாலுக்கு கூட்டிச் சென்று, அங்குள்ள விடுதியில் வைத்து இந்த கொடூரச் செயலைச் செய்துள்ளார்.

மேலும், அந்தச் சிறுவனுடன் இருந்த நெருக்கமான தருணங்களை ரகசியமாக வீடியோ எடுத்ததோடு மட்டுமல்லாமல், தற்போது அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு சிறுவனின் குடும்பத்தினரைத் துன்புறுத்தி வருகிறார். பாதிக்கப்பட்ட சிறுவன் இந்த மிரட்டலால் மன உளைச்சலுக்கு ஆளாகி, இறுதியில் தனது பெற்றோரிடம் நடந்த உண்மைகளைக் கூறியுள்ளார்.

   

இதனைத் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், அந்தப் பெண்ணின் மீது போக்சோ சட்டம் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஒரு நண்பனின் குடும்ப உறுப்பினரே இத்தகைய கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.