சிறையில் எனக்கு திட்டமிட்டு கொரோனாவை பரப்பினாங்க… உயிருக்கு போராடினேன்… பகீர் கிளப்பிய சசிகலா…!

By Soundarya on சித்திரை 10, 2026

Spread the love

பெங்களூரு சிறையில் இருந்தபோது, தனக்குத் திட்டமிட்டு கொரோனா வைரஸ் தொற்று பரப்பப்பட்டதாக வி.கே. சசிகலா அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தனது விடுதலையைத் தடுத்து நிறுத்துவதற்காக, தனது அறைக்குள் அடையாளம் தெரியாத, கொரோனா பாதிப்புள்ள பெண் ஒருவர் திட்டமிட்டு அமரவைக்கப்பட்டதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். பெண்கள் சிறையிலேயே தமக்கு மட்டும்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்றும், பழிவாங்கும் நோக்குடனேயே இந்தச் சதிச் செயல் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 15 நாட்களாக தமக்குச் சிகிச்சை அளிக்கப்படாமல், உடல்நிலை மிகவும் மோசமடைந்து 85% பாதிப்பு அடைந்த பின்னரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சசிகலா உருக்கமாகக் கூறினார். இது குறித்து, தான் சிறையில் இருந்தபோது கொரோனா அறிகுறிகள் இருந்தும், உரிய நேரத்தில் மருத்துவ உதவி மறுக்கப்பட்டதாகவும், பிற்காலத்தில் Victoria Hospitalல் அனுமதிக்கப்பட்டு, கடுமையாகப் போராடித் தான் உயிர் பிழைத்ததாகவும் சசிகலா தெரிவித்தார்.