இறைவன் படத்தை வாங்க வந்த Hotstar.. ஜெயம் ரவி மாமியாரால் நடந்த ‘Twist’.. என்னவா இருக்கும்..!!

By admin on ஐப்பசி 2, 2023

Spread the love

இயக்குனர் அகமது என்றென்றும் புன்னகை, மனிதன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் அகமதுவின் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் இறைவன். இந்த படத்தில் நயன்தாரா நரேன், ராகுல் போஸ், வினோத் கிசன், சார்லி, அழகம்பெருமாள், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

   

இறைவன் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இறைவன் படத்தின் போஸ்டர்களும், ட்ரைலர்களும் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. சைக்கோ திரில்லர் பாணியில் உருவான இறைவன் படத்திற்கு சென்சார் போர்டு A சான்றிதழ் கொடுத்திருந்தது. இந்த படத்தை Hotstar வாங்குவதாக இருந்தது.

   

 

ஆனால் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தான் ஏற்கனவே தயாரித்த சைரன் படத்தை வாங்குமாறு கூறியுள்ளார். அவர் சின்னத்திரை சங்கத்தில் முக்கிய பதவியில் இருப்பதால் அவர் கூறியதை ஏற்று Hotstar சைரன் படத்தை வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்தப் படத்திலும் ஜெயம் ரவி தான் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.