விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியானது 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்து நேற்று சீசன் 7 நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கியது. இதில் விசித்ரா, விஷ்ணு, வினுஷா தேவி, சரவணன், பாவா செல்லதுரை, கூல் சுரேஷ், ஆயிஷா உதயகுமார், ஜோவிகா, ஐஷு, பிரதீப் ஆண்டனி, மாயா கிருஷ்ணன், ரவீனா, யுகேந்திரன், மணி சந்திரா, விஜய் வர்மா, அனன்யா, பூர்ணிமா ரவி, நிக்சன் என 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இதில் விஜய் வர்மா இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் விஜய் வர்மாவை குறைவாக கவர்ந்த ஐஷு, நிக்சன், பாவா செல்லதுரை, அனன்யா, விணுஷா, ரவீனா ஆகிய 6 பேரும் இரண்டாவது பாதை வழியாக மற்றொரு வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று நிக்சனுக்கும் பிரதீப் ஆண்டனிக்கும் நடந்த வாதம் தான் தற்பொழுது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது, பாடகர் நிக்ஸன் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் போது பிரதீப் ஆண்டனியிடம் கேப்டன் பதவி இருந்தது. அந்த கேப்டன் பதவியை நிக்சன் அவரிடம் கேட்டார். அதற்கு பிரதீப் ‘எதற்காக உனக்கு கேப்டன் பதவி வேண்டும்? என கேட்க, இது இருந்தால் முதல் வாரம் எவிக்ஷன் ஆகமாட்டேன் அதனால் தான் என்றார். நிக்சன், பிரதீப் ஆண்டனியோ அதற்கு, “நீ ஏன் உள்ளே வரும்போதே தோத்து போயிடுவோம் என பயந்துட்டு வர. இப்படி எல்லாம் இருக்கக்கூடாது’ என்று அட்வைஸ் செய்தார்.

அதற்கு நிக்ஸனோ இல்லை நான் பயப்படவில்லை எனக்கு வேண்டும் என்றார். அதற்கு பிரதீப் சரி நான் உனக்கு தருகிறேன் ஆனால் நீ பயந்துவிட்டாய் அதனால் தருகிறேன் என்று நினைத்துக்கொள்வேன் என்றார். உடனே நிக்ஸனோ இல்லை நான் பயப்படவில்லை. நீங்களே கேப்டன் பதவியை வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார். தற்பொழுது இந்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள் இவர் தான் இந்த சீஸனின் வில்லனாக இருப்பாரோ? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
