மீண்டும் சிக்கலில் சிக்கும் ரோகினி.. உண்மையை கண்டுபிடித்த விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோட்..!

By Nanthini on புரட்டாதி 26, 2024

Spread the love

சிறகடிக்க ஆசை சீரியலில் நேற்று கொலு வைப்பதற்காக வீட்டில் உள்ள அனைவரிடமும் மீனாவும் முத்துவும் பணம் கேட்ட நிலையில் அத்துடன் நேற்றைய எபிசோடு முடிவடைந்தது. இன்றைய எபிசோடில் வீட்டில் கொலு வைப்பது எப்படி என்பது குறித்து ஸ்ருதி இடம் மீனா கூறிக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் விஜயா அங்கு வர, ஸ்ருதி மீனாவுடன் சண்டை போடுவது போல நடிக்கின்றார். பின்னர் வீட்டில் உள்ள அனைவரும் கொலு பற்றி பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் மீனா விஜயாவின் நடனப்பள்ளியில் நடனம் கற்றுக் கொள்ளும் இருவர் தவறாக நடந்து கொண்டது குறித்து முத்துவிடம் கூறுகிறார். ஒரு சாமி புகைப்படத்தை காட்டி இதில் இருப்பது போல அவர்கள் நெருக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தனர் என்று மீனா கூற அது குறித்து முத்து வீட்டில் உள்ள அனைவரிடமும் பேசுகிறார்.

   

ஆனால் விஜயா இவ தவறாக புரிந்து கொண்டால் அதற்கு நாம் என்ன பண்ண முடியும் இவ சொல்றது எல்லாமே பொய் அங்க அது மாதிரி எதுவுமே நடக்கல என்று விஜயா கூறுகிறார். மனோஜூம் தனது அம்மாவுக்கு சாதகமாக இவங்க எல்லாமே தப்பா தாமா புரிஞ்சுப்பாங்க நீங்க அதை விடுங்க என்று பேசுகிறார். ஆனால் விஜயாவின் கணவர் மீனா சொல்வதையும் யோசிக்க வேண்டியுள்ளது. நடன பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களுக்கும் நீதான் பொறுப்பு அங்கு எது நடந்தாலும் நீ தான் பதில் சொல்ல வேண்டும் என்ன நடக்கிறது என்று கொஞ்சம் கவனி என்று கூறுகிறார். ஆனால் விஜயா அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் மீனா இனிமே எனக்கு சாப்பாடு கொண்டு வர வேண்டாம் அவ வேலைய மட்டும் அவ பார்க்கட்டும் அங்க வந்தா தேவையில்லாத வேலையை பார்த்துட்டு இருக்கா என்று கூறுகிறார்.

   

 

பிறகு முத்துவும் மீனாவிடம் இனிமே நீ சாப்பாடு கொண்டு போக வேண்டாம் உன் வேலையை நிம்மதியா பாரு என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். அடுத்ததாக ஷோரூமில் மனோஜ் மற்றும் ரோகிணி இருக்கும்போது கஸ்டமர் ஒருவர் அங்கே வந்து நிறைய பொருட்கள் வேண்டும் என்று கேட்கிறார். மனோஜ் ஆசையாக லிஸ்ட் எல்லாம் எழுதிக் கொண்டே எப்போது வேண்டும் என்று கேட்க எனக்கு லாட்டரி குலுக்கல் வில போகிறது அன்று நான் எல்லாத்தையும் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறுகிறார். உடனே கோபத்தில் மனோஜ் அவரை கத்தி வெளியே அனுப்புகிறார்.

பின்னர் பாய் ஒருவர் அங்கு வந்து புகை போட்டுவிட்டு மனோஜிடம் உங்களுக்கு லெட்டர் கொடுத்த நபர் மாலை 4 மணிக்கு பொன்னியம்மன் கோவிலில் உங்களை சந்திக்க வேண்டும் முக்கியமான விஷயம் கூற வேண்டும் என்று உங்களிடம் சொல்ல சொன்னார் என்று கூறிவிட்டு கிளம்புகிறார். இதனைக் கேட்டு ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். அடுத்து நடன பள்ளியில் விஜயா அனைவருக்கும் நடனம் கற்றுக் கொடுக்கும் போது தவறாக நடந்து கொண்ட அந்த பெண்ணையும் நபரையும் கவனித்துக் கொண்டிருக்கிறார். இருவரும் ஒன்றாக தடவி தடவி நடனமாடிக் கொண்டிருக்கின்றன. இதனை விஜயா கவனித்து விட்ட நிலையில் இன்றுடன் சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோடு முடிவடைகிறது.