“மச்சான் கொஞ்சம் சாய்ஞ்சா மொட்டை அடிச்சுடுவேன்… சர்ஃபராஸ் கானை அலறவிட்ட சிராஜ்… ரசிகர்களை கவரும் வைரல் வீடியோ…!”

By Swetha on ஆவணி 12, 2026

Spread the love

இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகி வரும் நிலையில், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் பேட்டர் சர்ஃபராஸ் கான் இடையே நடந்த ஒரு ஜாலியான நிகழ்வின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், சிராஜ் பார்பராக மாறி சர்ஃபராஸ் கானுக்கு ட்ரிம்மர் மூலம் ஹேர்கட் செய்ய முயற்சிப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஹேர்ஸ்டைலிஸ்ட் அருகிலேயே இருக்கும் போது, சிராஜ் தன் கையில் ட்ரிம்மரை எடுத்துக்கொண்டு சர்ஃபராஸ் கானின் முடியை வெட்டத் தொடங்குகிறார். இருப்பினும், சிராஜின் இந்த புதிய ‘பார்பர் அவதாரத்தை’ கண்டு கொஞ்சம் பயந்த சர்ஃபராஸ், அவரிடமிருந்து தப்பிக்க முயல்வதும், பின் வேறு வழியின்றி தயக்கத்துடன் சம்மதிப்பதும் வீடியோவில் சிரிப்பை வரவழைக்கும் வகையில் உள்ளது. சிராஜ் தனது ஜாலியான முயற்சியை முடித்த பிறகு, தொழில்முறை ஹேர்ஸ்டைலிஸ்ட் தலையிட்டு சர்ஃபராஸுக்கு புதிய லுக்கை முடித்து வைக்கிறார்.

   

https://www.instagram.com/reel/Db5H13FT8sk/?utm_source=ig_web_button_share_sheet

   

காயமடைந்த சாய் சுதர்சனுக்கு மாற்றாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள சர்ஃபராஸ் கான், சக வீரர்களுடன் இவ்வளவு ஜாலியாக நேரத்தை செலவிடுவது அணிக்குள் இருக்கும் நல்ல நட்புறவைக் காட்டுகிறது. இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் “அண்ணன்-தம்பி கலாட்டா” என பாசத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.