ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, முகமது சிராஜ் மற்றும் விராட் கோலி இடையிலான நட்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. நீண்ட காலம் ஆர்சிபி அணியில் கோலியுடன் இணைந்து விளையாடிய சிராஜ், தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். போட்டிக்கு முன்னதாக நடந்த பயிற்சியின் போது, விராட் கோலி கவனிக்காத நேரத்தில் பின்னால் இருந்து ஓடி வந்த சிராஜ், அவரைத் திடீரெனக் கட்டிப்பிடித்து ஆச்சரியப்படுத்தினார்.
சிராஜின் இந்த எதிர்பாராத செயலால் ஒரு கணம் மிரண்டு போன விராட் கோலி, பின்னர் அது சிராஜ் தான் என்பதை உணர்ந்து சிரித்தபடி அவரைக் கட்டிப்பணைத்துக் கொண்டார். முன்னாள் அணி வீரர்களுக்கு இடையிலான இந்த அன்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “சிராஜின் வளர்ச்சியில் கோலிக்கு முக்கிய பங்கு உண்டு” என்று சிராஜ் பலமுறை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ள நிலையில், மைதானத்தில் எதிரெதிர் அணிகளாக மோதிக்கொண்டாலும் இவர்களது சகோதரத்துவப் பிணைப்பு மாறவில்லை என்பதை இச்சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது.
பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…
மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…
தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…