Categories: சினிமா

முத்து காட்டிய புது குறும்படம், வசமாக சிக்கிக்கொண்ட மனோஜ்.. அதிர்ச்சியில் ரோகினி.. சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்..!

Spread the love

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கப் போகிறது என்பது தொடர்பான செய்தி வெளியாகி இருக்கின்றது.

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா நகை கவரிங் என்பதற்கு பின்பு மனோஜ் மற்றும் விஜயாவின் வேலைதான் இருக்கின்றது என்பதை உணர்ந்த முத்து அதை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று முயற்சி செய்கின்றார். ஸ்ருதி மூலம் குரலை மாற்றிப் பேசி எப்படியாவது அவரை சிக்க வைத்து விடலாம் என்று யோசித்த போதும் மனோஜ் உஷாராகி தப்பித்துக் கொண்டார்.

பிறகு முத்து விஜயாவின் தோழியான பார்வதி மூலம் உண்மையை வரவைத்து விடலாம் என்று எண்ணி முத்துவும் மீனாவும் அங்கு சென்று பார்வதி ஆண்டியிடம் பேச்சு கொடுத்து உண்மையை வாங்க முயற்சி செய்து வருகிறார்கள். உடனே அங்கு வந்த விஜயா எதுவும் சொல்லாமல் தடுத்து விடுகின்றார். இதையடுத்து முத்து மற்றும் மீனா அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் இருக்கிறார்கள்.

இதற்கிடையில் முத்துவுக்கு அவரது நண்பரிடம் இருந்து ஒரு போன் கால் வருகின்றது. அவர் ஒரு ஷோரூமில் குறைந்த ரேட்டில் பொருள்கள் கிடைக்கின்றது என்று கூறி வர சொல்கிறார். உடனே முதுவும் அந்த ஷோரூமுக்கு செல்கின்றார். அங்கு போய் பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கும்போது போலீசார் அந்த இடத்திற்கு வந்து அங்கிருந்த நபர்கள் அனைவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விடுகிறார்கள்.

அந்த கடையில் உள்ள பொருட்களையும் எடுத்துச் சென்று விடுகிறார்கள். அப்போது முத்து மற்றும் நண்பரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விடுகிறார்கள். அனைவரும் லாக்கப்பில் இருக்கும் போது மனோஜ் அந்த நேரத்தில் ஸ்டேஷனுக்கு வருகிறார். ஸ்டேஷனில் வந்து இந்த பொருட்களில் என்னுடைய பொருள் இல்லை என்றும், எதார்த்தமாக கடையில் நடந்த பல விஷயங்களையும் உளறி விடுகின்றார்

என் மனைவியிடம் இருந்து நான் தப்பித்துக் கொள்வதற்காக நஷ்டத்தை சரி செய்வதற்காக பல சிக்கல்களை சந்தித்து வருகிறேன் என்று கூறி வருவதை லாக்கப்பில் இருந்து கொண்டே முத்து வீடியோவாக எடுத்து விடுகின்றார். பின்னர் வீட்டிற்கு சென்ற முத்து நேராக ரோகிணியை பார்த்து என் புருஷன் பிசினஸ் மேன் எப்படி லாபம் சம்பாதிக்கிறார் பாரு என்று பெருமை சொன்னியே அந்த லாபம் எப்படி வருது தெரியுமா? என்று கூறி அந்த வீடியோவை போட்டு காட்டுகிறார். இதை பார்த்த மனோஜும் விஜய்யாவும் திருதிருவென்று முழிக்கின்றார். மேலும் ரோகிணி மிகுந்த அதிர்ச்சி அடைகின்றார். இப்படி இன்றைய எபிசோடு முடிவடைகின்றது இதனால் ரசிகர்கள் பலரும் குஷியில் இருக்கிறார்கள்.

Mahalakshmi

Recent Posts

கள்ளக்காதலியின் கடனை அடைக்க நடந்த கொடூரம்…! “வேலைக்கு சென்ற பெண்ணை 7 துண்டுகளாக வெட்டி…” வசமாக சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…

45 minutes ago

அட கொடுமையே… கருவில் பறிபோன உயிர்… கணவன் மீது பழிபோட மனைவியின் அதிர்ச்சித் திட்டம்… குடும்ப உறவுகளை உலுக்கிய கோர நாடகம்…!

நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…

1 மணத்தியாலம் ago

அய்யய்யோ… கண் இமைக்கும் நேரத்தில்… மரணத்தின் வாயில் இருந்து தப்பிய சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கல்யாணம்னு வந்தா ஓடிப் போவியா?… காதலன் வீட்டிற்கு நேரில் சென்று… தந்தை முன் பஞ்சாயத்து கூட்டிய காதலி… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…

2 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… என்னடா இது… என் நம்பரை பிளாக் பண்ணிட்டா… குடிநீர்த் தொட்டியில இருந்து குதிக்கிறேன்?… காதலியை மிரட்ட ஷோலே… வீருவாக மாறிய இளைஞன் கைது… இணையத்தில் வீடியோ வைரல்…!

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…

2 மணத்தியாலங்கள் ago

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

2 மணத்தியாலங்கள் ago