Categories: சினிமா

காட்டிக்கொடுத்த தங்கமயிலை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய ராஜி, மீனா.. பொண்டாட்டிக்காக பொங்கிய செந்தில்…!

Spread the love

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர் 2. இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. இன்றைய எபிசோடு கதிருக்கு எப்படியாவது நாம் உதவி செய்ய வேண்டும் என்று எண்ணி ராஜி டியூஷன் எடுக்க ஆசைப்படுகின்றார். அதற்கு மீனாவும் உதவி செய்கின்றார். இந்த விஷயத்தை எப்போதும் போல் தங்கமயில் பாண்டியனிடம் உளறி விடுகின்றார்.

இதனால் ஆத்திரப்பட்டு வீட்டுக்கு வந்த பாண்டியன் ராஜியையும் மீனாவையும் கண்டபடி திட்டி விடுகின்றார். மேலும் மீனாவிடம் உன்னால் தான் இந்த வீட்டில் தேவையில்லாமல் பிரச்சனை வருகின்றது என்று கூறிவிட மீனா கதறி கதறி அழுகின்றார். உடனே செந்தில் அவரை சமாதானப்படுத்துகின்றார். இப்படி ஒரு பக்கம் இருக்க ராஜ்ஜியும் ரூமுக்குள் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறார்.

அங்கு வந்த கதிர் ராஜிக்கு சமாதானம் சொல்லி நீ வேலைக்கு எல்லாம் போக வேண்டாம். நான் கஷ்டப்படுகிறேன் என்று நீ கவலைப்பட வேண்டாம். எனக்கு வேலைக்கு செல்வதில் எந்த ஒரு கஷ்டமும் கிடையாது என்று கூறி அவரை சமாதானப்படுத்துகின்றார். இதை எடுத்து மீண்டும் கோமதி இடம் செல்லும் முத்துவும் ராஜியும் அவர்களிடம் பேச்சுக் கொடுக்க தொடங்கும் போது கோமதி ராஜியை கண்டபடி திட்டி விடுகின்றார்.

எல்லாமே உன்னால் தான் தனக்கும் தற்போது திட்டு கிடைக்குது என்று கண்டபடி திட்டுகின்றார். இதையடுத்து இருவரும் சமாதானம் ஆகிவிட்டார்கள். பின்னர் கோமதி இந்த விஷயம் எப்படி அவர் காதுக்கு சென்றது என்று கேட்க ஒரு வேலை தங்கமயில் சொல்லி இருப்பாரோ என்று யோசிக்கிறார். உடனே ராஜி இதை சும்மா விடக்கூடாது என்று சொல்லிவிட்டு தங்கமயில் ரூமுக்கு செல்கின்றார். அங்கு அவர் தனது அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கின்றார்.

இதற்கிடையில் உள்ளே நுழைந்த ராஜியும் மீனாவும் நீங்கள்தான் இந்த விஷயத்தை மாமாவிடம் சொன்னீர்கள் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். எதற்கு இப்படி பண்ணுகிறீர்கள், நாங்கள் தான் உங்களிடம் இந்த விஷயத்தை கூற வேண்டாம் என்று சொல்லி இருந்தேன் அல்லவா என ராஜி சத்தம் போடுகின்றார். உடனே நான் தெரியா தனமாக கூறிவிட்டேன் என்று சமாளிக்க ராஜியும் மீனாவும் கண்டபடி தங்கமயிலை திட்டி விடுகிறார்கள்.

இனி உங்க விஷயத்தை மட்டும் நீங்க பாருங்க. எந்த விஷயத்தில் தலையிட வேண்டாம். நீங்க உங்க கணவர் அத்தை மாமா அந்த அளவுக்கு இருந்துகிட்டா போதும் என்று லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விடுகின்றார். அடுத்ததாக செந்தில் கடையில் இருக்கும் பாண்டியனிடம் மீனாவை ஏன் இப்படி பேசினீர்கள். மீனாவால் தான் வீட்டில் எல்லா பிரச்சனைகளும் வருகின்றதா? அவள் மீது எந்த தப்பும் இல்லை என்று பாண்டியனிடம் சண்டை போட உடனே கொஞ்சம் யோசித்த பாண்டியன் உடனே வீட்டுக்கு போய் மருமகளை சமாதானப்படுத்தும் விதமாக ஆறுதல் கூறுகின்றார். இன்றைய எபிசோடில் இதுதான் நடைபெறுகின்றது.

Mahalakshmi

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

3 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

3 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

3 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

4 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

4 மணத்தியாலங்கள் ago