அடிச்சுது ஜாக்பாட்… வெள்ளித்திரையில் ஹீரோவாக கால்பதிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்… அவருக்கு ஜோடி யார் தெரியுமா..?

By Begam

Published on:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் வரும் முத்து மற்றும் மீனாவிற்காகவே இந்த சீரியலை பார்ப்பவர்கள் ஏராளம். ஒவ்வொரு நாளும் புது புது கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் டிஆர்பி யிலும் தொடர்ந்து முன்னணி இடத்தை பிடித்து வருகிறது.

   

கடந்த வாரத்தில் வீட்டை விட்டு வெளியே சென்ற ஸ்ருதியும், ரவியும் திரும்பவும் வீட்டிற்கு வந்ததை கேக் வெட்டி மொத்த குடும்பமும் கொண்டாடியது. இதைத்தொடர்ந்து மனோஜ் , கோயில் வாசலில் பிச்சைகார கோலத்தில் மீனாவிடம் முத்துவும், மீனாவும் வீட்டிற்கு கொண்டு வந்து அவரது அம்மா விஜயாமுன்  நிறுத்தினர்.

இதெல்லாம் ஒருபக்கமிருக்க விஜயாவும், ரோகிணியும் பிளான் செய்து எப்படியோ மீனாவின் பூக்கடையை அரசு அதிகாரிகளை வைத்து காலி செய்ய வைத்து விட்டனர். இதைத்தொடர்ந்து முத்து மீனாவுக்கு புது scooty வாங்கி தருவது போலவும், அதில் சென்று இனி மீனா பூ விற்க போவது போலவும் காட்டப்பட்டுள்ளது.

இந்த தொடரில் முத்துவை தாண்டி ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுவது மனோஜ் கதாபாத்திரம் தான். செம காமெடி ரோலில் நடித்துவரும் இவருக்கு சினிமா வாய்ப்பு வந்துள்ளது. ஸ்ரீரீதேவா நடித்துள்ள திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை திவ்யா துரைசாமி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இத்தகவல் உண்மையா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.