அந்தப் படத்துல தனுசுக்கு ஜோடியா நடிக்க கூப்பிட்ட வெற்றிமாறன்.. வாய்ப்பை உதறித் தள்ளிய சிறகடிக்க ஆசை மீனா..!

By Nanthini on பங்குனி 16, 2025

Spread the love

விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை கோமதி பிரியா. கடின உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் எப்படியும் நாம் வெற்றி பெற்று விடலாம் என்று பலரும் வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒருவர் தான் கோமதி பிரியா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கேரக்டரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் சிறகடிக்க ஆசை சீரியலின் டப்பிங் சீரியலில் இவர்தான் கதாநாயகியாக இருக்கிறார். ஏற்கனவே வேலைக்காரன் சீரியலில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆரம்பத்தில் சிறிய சிறிய கேரக்டரில் நடித்திருந்தாலும் தற்போது கதாநாயகியாக நடித்துள்ளார்.

சிறகடிக்க ஆசை சீரியல் மீனாவா இது! மாடர்ன் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க - விடுப்பு.கொம்

   

இந்த வருடத்தில் விஜய் டிவியின் அவார்ட் ஃபங்ஷனில் இவருக்கு சிறந்த கதாநாயகிக்கான விருது வழங்கப்பட்டது. இவருக்கு சீரியலில் எப்படி அப்பா இல்லையோ அதனைப் போலவே நிஜத்திலும் அப்பா இல்லை. சில வருடங்களுக்கு முன்புதான் அவர் உயிரிழந்தார். தனது தம்பி மற்றும் தங்கைகளை அம்மா கஷ்டப்பட்டு வளர்த்ததாகவும் தனியாக அம்மா எங்களுக்காக பல கஷ்டப்பட்டு இருக்காங்க என்றும் அவர் வேதனையுடன் கூறியிருந்தார்.

   

சிறகடிக்க ஆசை சீரியல் மீனா யார் தெரியுமா? ஆரம்பத்தில் இந்த நிலைமையிலா இருந்தார்? | Vijay TV Siragadikka aasai Serial who plays Meena in Gomathi Priya Biography - Tamil Oneindia

 

பிறகு சென்னைக்கு வேலைக்கு வந்த கோமதி பிரியா சீரியலில் நடிக்க வேண்டும் என்பதற்காக முயற்சி செய்து உள்ளார். பிறகு நிறைய கஷ்டங்களை தாண்டி தான் இன்று இந்த இடத்தில் நின்று கொண்டிருக்கிறார்.  இப்படியான நிலையில் கோமதி பிரியா சினிமாவில் தனக்கு வந்த மிகப் பெரிய வாய்ப்பை நிராகரித்து விட்டதாக சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அதாவது வெற்றிமாற நீ இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய ஹிட் கொடுத்த அசுரன் திரைப்படத்தில் தனுஷின் இளம் வயது கேரக்டருக்கு ஜோடியாக நடிக்க கோமதி பிரியாவை தான் ஆடிஷன் செய்து வெற்றிமாறன் செலக்ட் செய்துள்ளார்.

அதன் பிறகு திருநெல்வேலியில் படப்பிடிப்பு இருக்கு என்று கூறிய நிலையில் அந்த சமயத்தில் தெலுங்கு சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் கோமதிப்பிரியா அசுரன் பட வாய்ப்பை ரிஜெக்ட் செய்துள்ளார். கோமதி பிரியா நடிக்க மறுத்த பிறகு தான் அந்த வாய்ப்பு நடிகை அம்மு அபிராமிக்கு சென்றது. இப்படி ஒரு சூப்பரான வாய்ப்பை தவற விட்டதற்காக தான் வருந்தவில்லை என்றும் அதை ஏற்று இருந்தால் என்னுடைய பாதை சினிமா பக்கம் சென்று இருக்கும் எனவும் சீரியலில் நடிப்பது தான் தனக்கு சந்தோஷம் எனவும் கோமதி பிரியா பேசியுள்ளார்