விஜயை போல உதயநிதியும் சினிமாவிலிருந்து விலக வேண்டும்.. பரபரப்பை கிளப்பிய இயக்குனர் பேரரசு..!

By Nanthini on மார்ச் 16, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் பல கமெர்சியல் இயக்குனர்கள் வலம் வந்தாலும் ஒரு காலகட்டத்தில் பேரரசு திரைப்படங்களுக்கு என்றே அதிக வரவேற்பு இருந்தது. அவர் இயக்கும் திரைப்படங்கள் அனைத்துமே ஊர் பெயர்களை கொண்டே இருக்கும். அவர் முதன்முதலில் இயக்கிய திருப்பாச்சி திரைப்படம் 100 நாட்கள் மேல் தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது. முதல் திரைப்படமே தாறுமாறு ஹிட் என்பதால் இரண்டாம் திரைப்படத்திலும் விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு மீண்டும் கிடைத்தது.

சினிமாவிற்குள் ஜாதியை கலக்காதீர்கள்- இயக்குனர் பேரரசு ஆவேசம் | Tamil cinema perarasu speech goes viral

   

இவ்வாறு அவர் விஜய்யை வைத்து மீண்டும் இயக்கிய சிவகாசி திரைப்படம் வேற லெவலில் ஹிட் அடித்தது. இந்த திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஏவிஎம் நிறுவனமே பேரரசை தேடி வந்தது. அதாவது எங்கள் நிறுவனத்திற்கு ஒரு படம் இயக்கித் தாருங்கள். அஜித்தை வைத்து என்று கூறியிருக்கிறார்கள். விஜய்யை வைத்து தொடர்ந்து இரண்டு திரைப்படங்கள் ஹிட் கொடுத்த பேரரசுவை விஜய் இயக்குனர் என்றே முத்திரைக்குத்தி வைத்திருந்தார்களாம். அதன் பிறகு அஜித்தை வைத்து திருப்பதி படம் எடுக்கப்பட்டது. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.  பெரும்பாலும் இவருடைய படங்கள் அனைத்துமே ஊர் பெயரை கொண்டு தான் இருக்கும். இதுதான் இவருடைய படத்தின் சிறப்பு என்றே சொல்லலாம்.

   

அவரு அமைதியா, நிதானமா இருந்த GAP-ல விஜய் உருவாக்கிட்டாங்க! தல வந்தா வாலு தன்னால அடங்கும் - பேரரசு - Cinemapettai

 
இப்படியான நிலையில் ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய இயக்குனர் பேரரசு, விஜய் அரசியலில் முன்னேற வேண்டும் என்றால் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப புதிய கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்க வேண்டும். ஏற்கனவே உள்ள கட்சிகளின் கொள்கைகளை பின்பற்றுவது மக்களுக்கு புதிதாக தெரியாது. அதனால் விஜய் மக்களுக்கு நன்மை செய்ய புதிய தீர்வுகள் கொண்டு வர வேண்டும். விஜயின் அரசியல் பயணத்தில் அவருடைய ரசிகர்கள் தற்போது தொண்டர்களாக மாறியுள்ளனர். இது அவருக்கு மிகப்பெரிய ஆதரவாக. அவருடைய கட்சி மக்களின் நம்பிக்கையை பெற அவருடைய புதிய கொள்கைகள் மற்றும் திட்டங்களை தெளிவாக பரப்ப வேண்டும்.
விஜய்க்கு எதிராக களமிறக்கப்பட்டாரா உதயநிதி.? 2026இல் யாருக்கு சாதகம்.? யாருக்கு பாதகம்.?
ஒரு கட்சி வெற்றி பெறுவதை விட அது மற்ற கட்சிகளை எதிர்த்து பேச வேண்டும். விஜயின் அரசியல் பாதை சரியானதாக உள்ளது. இப்போது உதயநிதி அரசியலுக்கு வந்து விட்டார். தற்போது அவர் துணை முதல்வராக பதவி வகிக்கின்றார். ஆனால் அவர் திரைப்படத் துறையில் தொடர்ந்து செயல்படும் நிலையைப் பற்றி கருத்து தெரிவித்துள்ள பேரரசு, உதயநிதி படங்களை வாங்கி வெளியிடுவதில் இருந்து விலக வேண்டும். இன்னும் அரசியலில் முழு நேரமாக ஈடுபடாமலேயே கட்சி தொடங்கியதும் சினிமாவில் இருந்து விலகுவதாக விஜய் அறிவித்துள்ளார். உதயநிதியும் அவ்வாறே படங்களை தயாரித்து வெளியிடாமல் சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலகி அரசியலில் முழு கவனம் செலுத்த வேண்டும் என பேரரசு தெரிவித்துள்ளார்.