CINEMA
வசமாக சிக்கும் மலேசியா மருமகள்.. குறும்படம் போட்ட மீனா.. பரபரப்பான திருப்பங்களுடன் சிறகடிக்க ஆசை..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது புதிய கதைகளத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. எந்த நேரமும் ஒரு பரபரப்புடன் சென்று கொண்டிருக்கும் சீரியலில் முத்து -வெற்றி வசந்த் கதாநாயகனாகவும் , மீனா என்ற கதாபாத்திரத்தில் கோமதிப்பிரியாவும் நடித்து வருகிறார்கள். அம்மா மகன்களின் பாசத்தை அடிப்படையாக வைத்து ஓடிக்கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் மற்றொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.
மீனா அவருடைய தங்கை வழியாக ரோகிணி பற்றிய மருத்துவ விவரங்களையும் இரண்டாவது முறையாக கர்ப்பம் தரிக்க காத்திருக்கிறார் என்ற உண்மையையும் தெரிந்து கொள்கிறார். இந்த நிலையில் இந்த வாரம் முத்து -மீனா, மனோஜ்-ரோகினி, ரவி மற்றும் ஸ்ருதி ஆகிய மூன்று ஜோடிகளும் வீட்டில் இருக்கும் போது குழந்தை பற்றிய பேச்சு அடிப்படுகின்றது. அப்போது முத்து முதல் குழந்தையை கையில் வாங்கிய அனுபவத்தை வீட்டில் உள்ள அனைவரிடமும் சுவாரசியமாக பகிர்ந்து கொள்கிறார்.
இதனை ரோகிணி வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்க இதனை எல்லாம் கேட்டு ஏற்கனவே கடுப்பில் இருக்கும் விஜயா, மற்றவர்கள் வீட்டில் எல்லாம் நல்ல செய்தி உள்ளது. ஆனால் நம்ம வீட்டில் இன்னும் அதற்கான வாய்ப்பு வரவில்லையே என்று கூறி கத்துகிறார். எனவே அடுத்த வாரம் சிறகடிக்க ஆசை சீரியலில் பல புது புது திருப்பங்கள் இருக்கும் என தெரிகிறது. மலேசியா மருமகளின் உண்மை முகம் வெளியில் வந்தால் விஜயா முகத்தை எங்கு வைத்துக் கொள்வார் என்பதை இனிவரும் எபிசோடுகளில் நாம் பார்க்க முடியும்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க