NEWS
மூத்த குடிமக்களுக்கு மாதம் ரூ.20,500.. மத்திய அரசின் சூப்பரான திட்டம்.. உடனே நீங்களும் ஜாயின் பண்ணுங்க..!
இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயன் பெரும் விதமாக மத்திய அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் மூலமாக குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரை அனைவரும் பயன் அடைந்து வருகிறார்கள். ஒவ்வொருவரும் பயன் அடையும் விதமாக தனித்தனியாக பல திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. அதன்படி வயதான காலத்தில் மாதந்தோறும் வருமானம் பெற மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் சேரலாம்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) என்பது மூத்த குடிமக்களுக்காக வடிவமைக்கப்பட்ட திட்டமாகும். அரசாங்க ஆதரவுடன் இருப்பதால், இது மிகவும் பாதுகாப்பானதாகவும் நம்பகமானதாகவும் கருதப்படுகிறது. நல்ல வட்டி விகிதங்களுடன் பாதுகாப்பான முதலீட்டைத் தேடும் முதியவர்களுக்கு இந்தத் திட்டம் சிறந்தது.
இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டமானது ஆண்டுக்கு 8.2% வருடாந்திர வட்டி கிடைக்கும். 30 லட்சம் ரூபாய் முதலீட்டுக்கு ஆண்டுக்கு 2.46 லட்சம் வட்டி கிடைக்கும். அதாவது மாதம் 20,500 ரூபாய் பெறலாம். வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களை அணுகி இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். மேலும் SCSS திட்டத்தில் செய்யப்படும் டெபாசிட்களுக்கு வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்கு பெற தகுதியுடையவை.