சிறகடிக்க ஆசை தொடரில் நேற்றைய எபிசோடில் விஜயா பணத்தை காணவில்லை என பெரிய பிரச்சினை பண்ணி விட்டார். அதற்கு காரணம் மீனாதான். அவதான் பார்வதி வீட்டிற்கு பூ கொடுக்க வந்தாள். அவதான் எடுத்திருப்பாள் என்று பிரச்சனை செய்கிறாள். அதோடு நேற்றைய எபிசோட் முடிந்தது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பற்றி இனி காண்போம்.

இன்றைய எபிசோடில் மீனா அழுது கொண்டே இருப்பதே நினைத்த முத்து நேரடியாக பார்வதி வீட்டிற்கு செல்கிறான். அங்கு சென்று ஏன் அத்தை மீனாவை சந்தேகப்பட்டீங்க எங்க அம்மா தான் சந்தேகப்படுவாங்க இப்ப பார்வதி அத்தையும் என்னை சந்தேகப்படுறாங்க அப்படின்னு ரொம்ப மனசு உடைஞ்சு போயிட்டா. நீங்க எதுக்கு சந்தேகப்படுறீங்க உண்மையிலேயே மீனா பணத்தை எடுத்து இருப்பானு நீங்க நினைத்தீர்களா அப்படின்னு முத்து கேட்கிறான்.
உடனே பார்வதி இல்ல முத்து மீனாவை நான் சந்தேகப்படவே இல்ல. உங்க அம்மா தான் அப்படி சொல்லிட்டா. அது ஏன் பணம் இல்லை அது விஜயா ஓட பணம் தான். மீனாவோட தம்பி சத்யா கேஸ் வாபஸ் வாங்குறதுக்காக வக்கீல் 2 லட்சம் ரூபா கொடுத்தாரு. அதுதான் அந்த பணம் என்ற உண்மையை உளறி விடுகிறார் பார்வதி.
உடனே வீட்டிற்கு சென்ற முத்து அனைவரையும் கூப்பிட்டு தனது அப்பாவிடம் நடந்துவற்றை எல்லாம் கூறுகிறான். அம்மா வக்கீல் கிட்ட பணம் வாங்கிட்டு தான் கேஸை வாபஸ் வாங்கி இருக்காங்க. மீனா பணத்தை வாங்கி அந்த பணத்தை மீனா திருடிட்டான்னு பழி போட்டு இருக்காங்க. இப்போ என்ன செய்யலாம் நீங்களே சொல்லுங்க அப்பா அப்படின்னு கேட்கிறார் முத்து.
உடனே அதிர்ச்சி அடைந்த அண்ணாமலை மீனா கிட்ட மன்னிப்பு கேளு என்று கூறுகிறார். உடனே முத்து மீனா கிட்ட மன்னிப்பு கேட்க மாட்டாங்க அம்மா எனக்கு தெரியும். ஆனால் இனிமேலும் மீனாவையோ அவங்க குடும்பத்தையும் திருட்டு குடும்பம்னு சொல்லவே கூடாது. அப்படி சொன்னால் நடக்கிறதே வேற நான் என்ன பண்ணுவேன் என்று தெரியாது என்று சொல்லி விட்டு சென்று விடுகிறான் முத்து.

நடந்தது எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ரோகிணி நடுக்கத்தில் இருக்கிறார். ஏனென்றால் பணத்தை எடுத்ததே ரோகிணி தான். ஒருவேளை முத்து அதையும் கண்டுபிடித்து விட்டிருப்பான் என்று குழப்பத்தில் இருக்கிறாள். அடுத்ததாக மனோஜ் விஜயாவிடம் நீ எல்லாம் கவலைப்படாதம்மா பார்த்துக்கலாம் என்று சொல்ல இல்ல நான் திருப்பி எடுத்த பணத்தை திருப்பி அவ கிட்ட நான் கொடுக்கணும். அவ கிட்ட நான் தோக்க முடியாது என்று சொல்லி நீ உடனே மலேசியாவுக்கு டிக்கெட் போடு ரோகிணி அப்பாவை பாக்கணும் என்று சொல்கிறார் விஜயா. உடனே என்ன அத்தை சொல்றீங்க அப்படின்னு ரோகினி கேட்கிறாள் அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.
