சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் ரோகினி தன்னுடைய அம்மா மற்றும் மகன் கிரிஷை ஊருக்கு வெளியே பாதுகாப்பான இடத்தில் முத்து மீனா கண்ணில் பட்டுவிட்டிரக்கூடாது என்ற பத்திரமாக வைக்கிறாள். ஆனாலும் முத்து கிருஷை தேடி வந்து விடுகிறார். க்ரிஷின் ரகசியத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று மீனாவிடம் கூறுகிறான். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.

இன்றைய எபிசோடில் முத்து மீனா பேசிக் கொண்டிருந்ததை ஒட்டு கேட்டிருந்த ரோகினி நினைத்து பார்க்கிறாள். நம்மைப் பற்றிய ரகசியத்தை கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று முத்தும் மீனாவும் கூறுவதை ரோகினி கேட்டு டென்ஷன் ஆகிறாள். தூங்கி கொண்டிருக்கும்போது மனோஜூம் விஜயாவும் ரோகிணியை திட்டி இப்படி ஏமாத்திட்டியே அப்படின்னு சொல்லி வீட்டை விட்டு வெளியே அனுப்புகிற மாதிரி கனவு கண்டு விழித்துக் கொண்டு அழுது கொண்டிருக்கிறார் ரோகிணி.
அடுத்ததாக ரோகினி தனது தோழி என வித்யா வீட்டிற்கு செல்கிறாள். இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது வித்யா முத்துவின் போனை எடுத்து முத்து மீனாவின் போட்டோ வீடியோக்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது ரோகினி வித்யாவை திட்டுகிறாள். என்ன நீ இன்னும் ஃபோனை வச்சுட்டு இருக்கியா தூக்கி கடல்ல தூக்கி போடு என்று சொகிறாள். எவ்ளோ அழகா இருக்கு அவங்க போட்டோ வீடியோ எல்லாம் என்று வித்யா கூறுகிறாள். யார் கண்ணில் பட்டுச்சுன்னா நான் தான் மாட்டுவேன் என்று திட்டிக் கொண்டிருக்கிறாள் ரோகினி.
அந்த நேரத்தில் மீனா பூ கட்டி கொண்டு வந்து இருக்கும்போது பின்னாடியே ஒரு பையன் பாலோ செய்து வருகிறான். அந்த பாலோ செய்து வருவதை கண்ட மீனா பயத்தில் வித்யா வீட்டிற்கு வருகிறாள். உடனே ஒரு நிமிடம் டென்ஷன் ஆகிறாள் ரோகினி. ஏனென்றால் முத்துவின் போன் வித்யாவின் கையில் தான் இருந்தது. வித்யா என்னாச்சு மீனா ஏன் வந்து இருக்கீங்க என்று கேட்கும் போது ஒரு பையன் பாலோ செஞ்சிட்டே வந்தான் அதான் பயந்து போய் வந்துட்டேன் என்று கூறுகிறாள் மீனா.
சரி இருங்க மீனா நீங்க ரிலாக்ஸ் ஆகிட்டு போங்க நான் தண்ணி எடுத்துட்டு வரேன் என்று சோபாவில் போனை வைத்துவிட்டு செல்கிறாள் வித்யா. அதை பார்த்த ரோகினி திடுக்கிட்டாள். ஐயோ முத்து போனை வித்யா வச்சிட்டு போயிட்டாலே என்ன பார்த்தா பிரச்சினை ஆயிடுமே என்று யோசித்துக் கொண்டிருக்கிறாள். வித்யாலிடம் தண்ணி வாங்கி குடித்துவிட்டு நான் வீட்டுக்கு போறேன் லேட் ஆச்சுன்னா அத்தை மாமா என் வீட்டுக்காரர் எல்லாம் என்னமோ ஏதோ டென்ஷன் ஆயிடுவாங்க என்று கிளம்புகிறாள் மீனா. ஜஸ்ட் மிஸ்ஸில் ரோகினி தப்பித்து விடுகிறாள்.

அடுத்ததாக முத்துவின் கார் செட்டில் கூட வேலை பார்க்கும் ஒருவருக்கு பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள். அடுத்ததாக மீனாவின் பின் பாலோ அந்த பையன் முத்துவிடம் போய் ஒரு பொண்ணை காதலிக்கிறேன் என்று மீனாவை நினைத்து சொல்கிறான். என் காதலை எப்படி அந்த பொண்ணிடம் சொல்வது என்று கேட்கும்போது முத்து காதலுக்கான ஐடியாக்களை கொடுக்கிறார். அந்தப் பையன் துரத்துவது மீனாவை தான் என்று தெரியாமலேயே முத்து ஐடியா கொடுக்கிறான். இனி இது என்ன ஆகும் என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.
