விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியல் தினம்தோறும் புதுவிதமான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. நேற்றைய எபிசோடில் வீட்டில் கொலு வைக்கலாம் என்று மீனா கூட அதற்கு விஜயா அதெல்லாம் முடியாது என்று வாக்குவாதம் செய்து கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில், வீட்டில் கொலு வைத்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நல்லது என்று விஜயாவின் தோழி கூற அதை ஏற்றுக் கொண்ட விஜயா வீட்டில் கொலு வைக்க சம்மதிக்கிறார். அதுமட்டுமல்லாமல் கொலு பூஜையில் நான்தான் பாட போகிறேன் என்றும் கூறிக் கொண்டிருக்கிறார். அடுத்து விஜயாவின் நடன பள்ளியில் நடனம் கற்றுக் கொள்ளும் இருவரும் காதல் வலையில் சிக்கிக் கொள்ள தனிமையில் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கின்றனர்.
அந்த சமயத்தில் உள்ளே சென்ற மீனா, இந்த வேலை எல்லாம் இங்க வச்சுக்காதீங்க அப்புறம் நல்லா இருக்காது என்று அவர்களை திட்டி விட்டு விட்டு வெளியே வருகிறார். இதனால் பயப்பட்ட அவர்கள் உடனே வெளியில் வந்து விஜயாவிடம் மீனாவை பற்றி தவறாக கூறி அவரிடம் சிக்க வைக்கின்றனர். இதனால் விஜயா மீனாவை திட்டி வீட்டுக்கு அனுப்புகிறார். வீட்டில் ரோகினி தனது அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அந்த சமயத்தில் மனோஜ் உள்ளே வர யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் என கேட்கிறார். வித்யாவின் அம்மாகிட்ட தான் பேசிகிட்டு இருந்தேன் அவங்களுக்கு உடம்பு சரியில்லை அதனால டேப்லெட் போட சொன்னா என்று கூறுகிறார்.
சரி என்று மனோஜ் கூறிவிட்டு கொலு விஷயத்தை ரோகிணி கூற இதற்கெல்லாம் என்னால் பணம் கொடுக்க முடியாது என்று மனோஜ் கூறுகிறார். அதெல்லாம் நாம கொடுக்க வேண்டாம் கொலுவில் கலந்து கொள்ள புது டிரஸ் வாங்கணும் அதுக்கு மட்டும் போய் வாங்கிட்டு வரலாம் என்று கூறுகிறார். அடுத்ததாக முத்து கொலு வைக்க தேவையான பொம்மைகளை வாங்கிக் கொண்டு வருகிறார். வீட்டில் கொலு பூஜை நடப்பதால் அனைவரும் பணம் தர வேண்டும் என்று மீனா விடம் கூறிவிட்டு அவரையும் அழைத்துக் கொண்டு மனோஜிடம் சென்று பணம் கேட்கிறார்.
அதற்கு மனோஜ் தர மாட்டேன் என்று கூற அப்போ வீட்டில் நடக்கும் பூஜையில் நீ கலந்து கொள்ளக் கூடாது உனக்கு எதுவுமே கிடைக்காது என்று முத்து கூறிய நிலையில் ரோகிணி நான் பணம் தருகிறேன் என்று மீனாவிடம் கூறுகிறார். அடுத்து சுருதி ரவி தனது ஓனர் மகளுடன் ஷாப்பிங் சென்றது குறித்து அவரிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் உள்ளே சென்ற மீனாவும் முத்துவும் வீட்டில் நடக்கும் பூஜை பற்றி கூறி பணம் கேட்க அவர்களும் தருவதாக கூறுகின்றனர். பிறகு ரவி எனக்கு நேரமாகிவிட்டது நான் கிளம்புகிறேன் என்று கூற சுருதி எதற்கு இவ்வளவு சீக்கிரமாக கிளம்புகிறாய் நீ இப்பொழுது பண்ணுவதெல்லாம் சரியில்ல என்று கூறி சண்டை போடுகிறார். பிறகு ரவி வீட்டில் இருந்து கிளம்பியதும் மீனாவிடம் கொலு பற்றி ஸ்ருதி பேசிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…
தமிழகத்தில் தவெகவுக்குத் தெரியாமல் வாக்களித்துவிட்டோமோ என்று ஓட்டுப்போட்ட மக்களே நினைக்கும் அளவுக்குத்தான் இன்றைய ‘சோபா மாடல்’ ஆட்சி உள்ளதாக எதிர்க்கட்சித்…