சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடில், மனோஜ்க்கு மொட்டை கடிதம் எழுதியது யார் என்று கண்டுபிடிக்க கோவிலுக்கு முத்து செல்கிறார். அங்கு முத்துவுக்கு தெரிந்த ஒரு நபர் வருகையில் அவரிடம் நடந்ததை கூறி கேட்கிறார். அப்போது அவர் போனில் எடுக்கப்பட்ட சில வீடியோக்களை காட்டும்போது அந்த வேஷம் போட்டுக் கொண்டு வந்த போலி சாமியாரை முத்து கண்டுபிடித்து விடுகிறார். பிறகு சவாரிக்காக போன் வந்ததும் அங்கிருந்து முத்து கிளம்புகிறார். ரோகினி வீட்டில் மாட்டி விடக்கூடாது என்பதற்காக தனது தோழி வித்தியாவுடன் சேர்ந்து முத்துவுக்கு எதிராக திட்டம் தீட்டுகிறார். என்னுடைய பிரச்சனையில் முத்து தலையிடாமல் இருக்க வேண்டுமென்றால் முத்துவுக்கும் மீனாவுக்கும் இடையில் பிரச்சனையை நாம் உண்டு பண்ண வேண்டும்.
அதற்காக மீனாவின் தம்பி எங்க அத்தை விஜயாவிடம் திருடிய அந்த வீடியோவை முத்துவின் ஃபோனிலிருந்து எப்படியாவது எடுக்க வேண்டும் என்று கூறுகிறார். பிறகு என்னால் அதை செய்ய முடியாது முத்துவின் காரில் சவாரி செய்வது போல் செய்து அவருடைய போனை வாங்கி நீதான் அந்த வீடியோவை திருட்டுத்தனமாக எடுக்க வேண்டும் என்று வித்யாவிடம் ரோகிணி கூறுகிறார். அதனைப் போலவே மறுநாள் முத்துவுடன் வித்யா காரில் பயணம் செய்கிறார். அப்போது என்னுடைய செல்போனில் சார்ஜ் இல்லை என்று கூறி அவர் முத்துமிடமிருந்து நாசுக்காக செல்போனை வாங்கி வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அந்த சமயத்தில் மீனாவிடம் இருந்து போன் வந்ததால் முத்து அவரிடம் இருந்து போனை வாங்கி பேசிக்கொண்டே வருகிறார். பிறகு வித்யாவை இறக்கி விடுகிறார். உடனே ரோகினிக்கு போன் செய்து என்னால் அந்த வீடியோவை எடுக்க முடியவில்லை ஆனால் முத்து அந்த போலி சாமியாரை கண்டுபிடித்துவிட்டார் நீ கொஞ்சம் உஷாராக இருந்து கொள் என்று ரோகினி இடம் கூறுகிறார். பிறகு வீட்டிற்கு வரும் முத்து நான் அந்த மொட்டை கடிதம் போட்டது யார் என்று கண்டுபிடித்து விட்டேன்.
அவனை மனோஜ் திருமணத்தில் தான் முதல்முறையாக பார்த்தேன். அப்போது என் காரில் அமர்ந்து கொண்டு பெண்களைப் பற்றி தவறாக பேசிக் கொண்டிருந்தான். அப்போது எங்கிட்ட நல்ல அடி வாங்கிக்கிட்டா. மற்றொரு நாள் ஒருவரை சாலையில் இடித்துவிட்டு நிக்காமல் சென்றான் அவனை துரத்தி பிடித்து நான் தான் போலீசில் ஒப்படைத்தேன். அவன் தான் இது மாதிரி மொட்டை கடிதம் எழுதி இருக்கிறான் என்று வீட்டில் கூறிக் கொண்டிருக்கிறார் முத்து. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து ரோகிணி அப்படியே அமர்ந்து கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.