நான் ராஜ்கிரணப் பாக்க போனபோது அவர்கூட யாருமே இல்லை… ஆனா இன்னைக்கு அவரே அத மறந்துட்டு பேசுறாரு- சேரன் ஆதங்கம்!

By vinoth on புரட்டாதி 30, 2024

Spread the love

தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் இருந்த ராஜ்கிரண் நடிகராக அறிமுகமான படம்தான் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா இயக்கிய ‘என் ராசாவின் மனசிலே’. உதவி இயக்குனராக இருந்த போது 12 ஆண்டுகளுக்கு முன்னர் தான்  எழுதிய ஒரு கதையை அவர் அப்போது தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் இருந்த ராஜ்கிரணிடம் கூறியுள்ளார். அந்த கதை ராஜ்கிரணுக்கு பிடித்துவிடவும், அதில் இருந்த மாயாண்டி என்ற முரடனின் கதாபாத்திரம் தனக்கு பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்து தானே நடிக்கவும் முடிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் முதலில் ராமராஜனைதான் நடிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர். ஆனால் அவர் நெகட்டிவ் தன்மையுள்ள கதாபாத்திரம் என்பதால் யோசித்துள்ளார். அதனால் ஒரு கட்டத்தில் ராஜ்கிரண் நானே இந்த படத்தில் நடிக்கிறேன் என்று சொல்லி இறங்கியுள்ளார். படம் வெளியாகி அவரை முன்னணி கதாநாயகன் ஆக்கியது. ஒரு கட்டத்தில் ரஜினி, கமலுக்கு இணையான சம்பளத்தை அவர் பெற்றார்.

   

Rajkiran in Nandha movie

   

ஆனால் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள்ளாகவே ஹீரோவாக அவரின் மார்க்கெட் விழுந்தது. அதன் பின்னர் குணச்சித்திர நடிகராக நந்தா திரைப்படத்தில் ரி எண்ட்ரி கொடுத்தார். அந்த படத்தில் அவரின் நடிப்பு பாராட்டுகளைப் பெற தொடர்ந்து இப்போது வரை குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார்.

 

அவரை இந்த ரூட்டுக்கு மாற்றியது பாலா இயக்கிய நந்தா திரைப்படம்தான். அதன் பின்னர் சேரன் இயக்கிய தவமாய் தவமிருந்து திரைப்படம் ஒரு குணச்சித்திர நடிகராக அவரை உச்சத்துக்குக் கொண்டு சென்றது. அந்த படத்துக்காக அவரை தேர்வு செய்தது பற்றி ஒரு நேர்காணலில் பேசியுள்ள இயக்குனர் சேரன் பல சுவாரஸ்யமான சம்பவங்களைப் பகிர்ந்துள்ளார்.

Rajkiran in Thavamai Thavamirunthu

அதில் “அப்போது ராஜ்கிரண் சாருக்கு சுத்தமாக மார்க்கெட் இல்லை.  ரஜினிக்கு இணையாக சம்பளம் வாங்கியவர். ஆனால் நான் என் படத்துக்காக அவரை பார்க்க சென்ற போது, வீட்டில் தனியாக இருந்தார். அவரை சுற்றி யாருமே இல்லை. நான்தான் முதல் முதலில் அவரை குணச்சித்திர நடிகராக்க தவமாய் தவமிருந்து படத்தில் நடிக்க சொல்லி சம்மதிக்க வைத்தேன். அதன் பிறகுதான் பாலா நந்தா படத்துக்காக சென்றார்.

ஆனால் நந்தா திரைப்படம் முன்னாலேயே ரிலீஸாகிவிட்டது. ஆனால் அதை இப்போது ராஜ்கிரண் சாரே மறந்துவிட்டு பாலாதான் திருப்புமுனை தந்தார் என்றெல்லாம் சொல்லிவருகிறார்.” எனக் கூறியுள்ளார்.