saii

விஜயாவை கடுப்பேத்தும் ஸ்ருதி… பிசினஸில் அடுத்த கட்டத்திற்கு செல்லும் மனோஜ்… சிறகடிக்க ஆசையில் இன்று…

By Meena on டிசம்பர் 7, 2024

Spread the love

சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் மனோஜ் விஜயாவின் போட்டோவை தனது ஷோரூமிலிருந்து எடுத்து போட சொல்கிறார். ஆனால் போட்டோவினால் அதிர்ஷ்டம் வருவது போல் தெரிந்தவுடன் அதை உள்ளே வைக்க சொல்லிவிடுகிறான். அடுத்ததாக மீனாவை பாலோ செய்து வரும் முருகன் என்ற நபர் மீனாவை பொண்ணு கேட்டு சொல்லலாம் என்று முடிவு எடுக்கிறார் அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.

   

இன்றைய எபிசோடில் மீனாவை காதலிக்கும் முருகன் என்ற நபர் நேராக முத்துவின் வீட்டிற்கு தாம்பூலத் தட்டை கொண்டு சென்று அண்ணாமலையிடம் அவரது மகள் தான் மீனா என்று நினைத்துக் கொண்டு உங்க பொண்னை நான் விரும்புறேன் அதுக்கு தான் பொண்ணு கேட்டு வந்து இருக்கேன் என்று சொல்கிறான். அந்த நேரத்தில் ரவியும் ஸ்ருதியும் இருக்கின்றனர். இதை கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.

   

சிறிது நேரத்தில் முத்துவும் அங்கு வருகிறான். நீ என்னடா எங்க இருக்க என்று முருகனிடம் கேட்கிறார். இந்த பொண்ணை தான் நான் லவ் பண்றேன் அன்ணே அதான் பொண்ணு கேட்டு வந்திருக்கேன் என்று மீனாவை கை காட்டுகிறான். அண்ணாமலை இது நான் முடிவு எடுக்க வேண்டிய விஷயம் கிடையாது. முத்து தான் முடிவு எடுக்கணும் அப்படின்னு சொல்கிறார். உடனே முத்து என்னடா வேலை பண்ணி வச்சிருக்க ஒரு பொண்ண லவ் பண்றதுக்கு முன்னாடி அவங்க கழுத்தையும் பாருடா கழுத்துல தாலி போட்டு இருக்கிறது உனக்கு கண்ணு தெரியலையாடா என்று சத்தம் போடுகிறான்.

 

அடுத்ததாக நீ லவ் பண்றேன்னு சொன்னது என் பொண்டாட்டி டா என்று முத்து சொல்கிறான். உடனே முருகன் முத்துவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு சொல்கிறான். எனக்கு லவ் பண்ண இதுவரைக்கும் ஐடியா கொடுத்தது முத்து அண்ணா தான் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறான்.

இந்த நேரத்தில் பார்த்து விஜயா வருகிறாள். ஸ்ருதியும் மீனாவும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து விடுகிறாள். இதுவரைக்கும் ஸ்ருதியும் மீனாவும் சண்டை போடுவதை போல நாடகம் தான் செய்து கொண்டிருந்தார்கள். உடனே ஸ்ருதி விடுங்க மீனா நான் உண்மைய சொல்கிறேன் என்று சொல்லி நாங்க காம்ப்ரமைஸ் ஆயிட்டோம் ஆண்ட்டி எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்ல என்று மீனாவின் கையை பிடித்துக் கொண்டு சொல்கிறாள். உடனே கடுப்பாகி விஜயா சென்று விடுகிறாள்.

மீனா முத்துவை நன்றாக அடித்து விடுகிறார்கள் என்ன வேலை பண்றீங்க உங்களுக்கு இருக்க பிரச்சனை இந்த பிரச்சனை தேவையா என்று மீனா சத்தம் போடுகிறாள். அந்த இடத்தில் மனோஜூம் ரோகிணியும் ஸ்வீட் வாங்கிக்கொண்டு வருகின்றனர். வீட்டில் அனைவருக்கும் ஸ்வீட் கொடுக்கின்றனர் மனோஜ் இன்னைக்கு ஷோரூமில் ரொம்ப நல்ல விஷயம் நடந்துச்சு. நம்ம லான்ச் பண்ண புதிய ப்ராடக்ட் வந்து நல்லாவே சேல்ஸ் ஆகி நமக்கு லாபம் கொடுத்திருக்குனு சந்தோஷ் சார் போன் பண்ணாங்க நான் பிசினஸ்ல இனி அடுத்த லெவலுக்கு போக போறேன் என்று கூறி சந்தோஷப்படுகிறான். அப்போது முத்து ஏதோ வம்பு இழுக்கவே ரோகிணி மனோஜ்க்கு நிறைய டேலண்ட் இருக்கு அவர் டேலண்ட்டுக்கு அவர் இன்னும் மேல போவாரு என்று கூறுகிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.