தென்னிந்திய சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் மனதில் நிற்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் புஷ்பா 2. ஷ்பா தி ரூல் படத்தின் முதல் பார்வை இந்த ஆண்டு வெளியானதில் இருந்தே படம் குறித்து பார்வையாளர்கள் மனதில் அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இந்தத் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. புஷ்பா முதல் பாகம் வெற்றியை தொடர்ந்து தற்போது 2ம் பாகம் மாஸாக தயாராகி டிசம்பர் 5 வெளியாகிவிட்டது.
படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. புஷ்பா முந்தைய பாகத்தில் கூலி தொழிலாளியாக இருந்து படிப்படியாக உயர்ந்து அந்த காட்டுக்கு ராஜா வாகி அடுத்து என்ன செய்யப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பும், பகத் பாஸில் புஷ்பாவுக்கும் இடையிலான மோதல் எப்படி இருக்கும் என்பதையும் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள். முதல் பாகத்தில் இவர்களுடைய நடிப்பை பார்த்து வியந்த ரசிகர்கள் இரண்டாம் பாகத்திற்காக காத்திருந்தனர்.
அது வீண் போகவில்லை என்பது போல ஒவ்வொரு நடிகரும் அவர்களுடைய பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்கள். படம் ஒட்டுமொத்தமாக குறிப்பாக கடந்த 5ம் தேதி வெளியான இப்படம், இந்தியாவில் மட்டும் 164 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக இந்த படம் முதல் நாளில் மட்டுமே 294 கோடி ரூபாய் வசூலித்ததாக புஷ்பா படத்தை தயாரித்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.
அதன்படி, வெளிநாட்டில் மட்டும் புஷ்பா 2 படம் வெளியான முதல்நாளில் சுமார் 130 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்நிலையில், இரண்டாவது நாளில் அந்த படத்தின் மொத்த வசூல் 400 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவலை இன்னும் படக்குழு வெளியிடவில்லை. அதனால் பொறுத்திருந்து பார்க்கலாம்.