சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடில், மீனாவின் மாமியார் விஜயா சத்யாவை அடித்து விட்டு சென்றதும் மீனாவின் வீட்டில் இருக்கும் அனைவரும் அமர்ந்து அழுது கொண்டிருக்கின்றன. மீனாவின் அம்மா இந்த அசிங்கத்தை எல்லாம் நான் தாங்கிக் கொண்டு இருக்கிறதுக்கு நானும் செத்துப் போயிடலாம் என்று கூறி திட்டுகிறார். சத்யா அனைவரிடமும் மன்னிப்பு கேட்க எல்லோரும் திட்டுகின்றனர். பிறகு மாமாவுக்கு இந்த விஷயம் முன்னாடியே தெரியும் அதனால தான் என் கைய மாமா உடச்சாறு என்று சத்யா கூறுகிறார். இதனை கேட்டதும் மீனா கதறி அழுகிறார். உனக்காக நான் அவர்கிட்ட நிறைய சண்டை போட்டேன் அப்ப கூட அவர் உண்மைய சொல்லல.
இந்த விஷயம் தெரிஞ்சா நான் தாங்க மாட்டேன்னு அவருக்கு நல்லாவே தெரியும் எனக்காக அத்தனையும் அவர் சகிச்சுக்கிட்டு இருந்திருக்கிறார் என்று மீனா கூட உடனே மீனாவின் தங்கையும் மாமா வேற யாராவது இருந்தா சும்மா விட்டு இருக்க மாட்டாரு நீயா இருக்கவும் விட்டுட்டாரு அவரை நான் கூட தப்பா நினைச்சுட்டேன் என்று கூறுகிறார். மீனாவின் அம்மாவும் மாப்பிள்ளை எவ்வளவு நல்லவர் அவர போய் நான் தப்பா நினைச்சுட்டேனே இவனுக்காக அவர் கூட நான் சண்டை போட்டேன் என்று கூறி அவரும் வருத்தப்படுகிறார். பிறகு விஜயா வீட்டில் அமர்ந்து கொண்டு இருக்க விஜயாவின் கணவரும் அமைதியாக இருக்கிறார்.
ரோகினி இனிமே நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை முத்துவும் வீட்டை விட்டு போயிடுவான் என்று நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் முத்து வீட்டிற்கு வர, அப்பா திருப்பதி போயிட்டு வந்தேன் சாமி தரிசனம் பண்ண முடியல இந்தாங்க உங்களுக்கு லட்டு என்று கூறி அப்பாவிடம் நீட்டுகிறார். உடனே முத்துவின் அப்பா கோபத்தில் எழுந்து செல்கிறார். பிறகு மனோஜ் நடந்ததைக் கூறி சிசிடிவி வீடியோவை செல்போனில் முத்துவிடம் காட்டுகிறார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்து தனது அப்பாவிடம் பேசப் போகும்போது அவர், எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல உங்க அம்மா கேட்கிற கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியல டா என்று கூறிவிட்டு அங்கிருந்து மௌனமாக செல்கிறார். உடனே முத்து நான் என் பொண்டாட்டிய போய் கூட்டிட்டு வரேன் அப்படின்னு அங்கிருந்து கிளம்பும்போது விஜயா அவ இனிமே இங்க வரக்கூடாது அவளுக்கும் இந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறுகிறார்.
எதுக்கு அப்படி சொல்றீங்க அவ இந்த வீட்டு மருமக அவ இங்கதான் வருவா நான் போய் என் பொண்டாட்டிய கூட்டிட்டு வர நடந்த தப்புக்கு அவளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு என்று கூறிவிட்டு அங்கிருந்து முத்து சொல்கிறார். பிறகு மீனாவின் வீட்டிற்கு சென்றதும் மீனா முத்துவை கட்டிப்பிடித்து அழுகிறார். நடந்ததை கூறி மீனாவின் வீட்டில் இருக்கும் அனைவரும் முத்துவிடம் மன்னிப்பு கேட்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
இன்றைய காலகட்டத்தில் வாலிபர்கள் விபரீத விளையாட்டுகளில் ஈடுபட்டு ஆபத்தில் சிக்கி கொள்கின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு…
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து…
தேவர் குருபூஜையை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை ஆகிய…
உத்திரபிரதேசம் ஹபீஸ்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள கமுவா கிராமத்தைச் சேர்ந்த அனில், கடந்த நவம்பரில் அனிதாவை காதல் திருமணம்…
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அப்துல் அதே பகுதியில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த…
பள்ளிக்குச் செல்வது பல குழந்தைகளை அடிக்கடி பயமுறுத்துகிறது. அவர்களுக்குப் பள்ளிக்குச் செல்வது ஒரு கனவுதான். படிப்பு என்றாலே அவர்களுக்கு பாட்டியின்…