Categories: சினிமா

நான் கீழ விழுந்து கிடக்கும்போது நாகேஷ் வந்து அடிச்ச கமெண்ட்… நானே சிரிச்சிட்டேன் – வாலி பகிர்ந்த சுவாரஸ்ய தருணம்!

Spread the love

தமிழ் சினிமாவில் தன்னுடைய வித்தியாசமான உடல்மொழி மற்றும் நகைச்சுவை தெறிக்கும் வசனங்கள் மூலமாகக் கலக்கியவர் நாகேஷ். 20 ஆண்டுகளுக்கு மேலாக இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். அவரை தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின் என்றும் சொல்வர். கவுண்டமணி வருகைக்குப் பிறகும் பல படங்களில் நகைச்சுவை, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

#image_title

அவர் தன்னுடைய மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த போது கிட்டத்தட்ட அனைத்து தமிழ் படங்களிலும் நடித்தார். ஒரு நாளைக்கு ஷிஃப்ட் கணக்கில் ஐந்து படங்களில் கூட நடித்துள்ளார். இதனால் எந்த பட ஷூட்டிங்குக்கும் அவரால் சொன்ன நேரத்தில் செல்ல முடியாதாம். அதனால் அவர் வர தாமதமானால் எம் ஜி ஆர், சிவாஜி கூட அவருக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உருவானதாம்.

நகைச்சுவை நடிகர் என்பதால் நாகேஷ் வெறும் காமெடியில் மட்டுமே கலக்குவார் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அவர் சர்வர் சுந்தரம் மற்றும் எதிர்நீச்சல் ஆகிய படங்களில் எமோஷனல் வேடங்களில் கலக்கி இருப்பார். நாகேஷ் திரையில் மட்டும் அசாத்திய நகைச்சுவைத் திறன் கொண்டவர் இல்லை. நிஜ வாழ்க்கையிலும் அதே அளவுக்கு நகைச்சுவை உணர்வு கொண்டவர்.

இதுபற்றி நாகேஷுடன் சில ஆண்டுகள் ஒன்றாக அறைத் தோழனாக இருந்த வாலி அவர்கள் ஒரு சுவாரஸ்யமான தருணத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “நான் ஒரு தடவை பாத்ரூம் போயிட்டு திரும்பி அறைக்கு வரும்போது தண்ணீரில் கால் வைத்து வழுக்கி விழுந்துவிட்டேன். எழுந்திருக்க முடியாமல் படுத்தே இருந்தேன். அப்போது அங்கே வந்த நாகேஷ் என்னை பார்த்து “ஏன்டா ரூம்ல அவ்ளோ எடம் இருக்கு? அங்க எல்லாம் படுக்காமல் இங்க வந்து படுத்திருக்க” என்றான். அந்த வலியில் கூட எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. அப்படி அசாத்தியமான நகைச்சுவை உணர்வு கொண்டவன் அவன்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

3 minutes ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

5 minutes ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

10 minutes ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

11 minutes ago

அம்மாடியோ… எவ்ளோ பெருசு?… கிராமத்திற்குள் புகுந்த ராட்சத முதலை… அலறியடித்து ஓடிய மக்கள்… இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!

மனித நடமாட்டம் உள்ள ஊருக்குள் திடீரென ஒரு முதலை நுழைவதைக் காணும்போது, என் மனதில் பெரும் அதிர்ச்சியும் அச்சத்துடன்கூடிய பரபரப்பும்…

13 minutes ago

திக்.. திக்..! “பழிக்கு பழிதீர்த்த கும்பல்”… உளவு பார்த்து முடித்த ஸ்கெட்ச்!… சிறையில் இருந்து வந்த 10-வது நாள்… துடிதுடிக்க முடிந்த வாழ்க்கை… அரங்கேறிய வெறிச்செயல்…!!

திண்டுக்கல் பகுதியில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த நபர் ஒருவர், பத்தே நாட்களில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்…

15 minutes ago