#image_title
பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் அமரன். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
#image_title
இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரஜினி, கமல், அஜித் மற்றும் விஜய் போன்ற பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது .
மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் முகுந்தின் மனைவியாக சாய் பல்லவி நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் தற்போது அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், படம் நான்கு நாட்களில் சுமார் ரூபாய் 130 கோடி ரூபாய் 135 கோடிகள் வரை வசூல் செய்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முதல் நான்கு நாட்களில் படம் இந்தத் தொகையை வசூல் செய்திருப்பதால், இன்றும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் இருக்கும் என எதிர்பார்க்கலாம். படம் விரைவில் ரூபாய் 200 கோடிகளை வசூல் செய்யும் என்றும் கூறப்படுகிறது..
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…