பொதுவாகவே சீரியல்களின் வெற்றி தோல்வி என்பது டிஆர்பி-யை வைத்து தான் கணிக்கப்படுகின்றது. ஒவ்வொரு வாரமும் டிஆர்பி பட்டியல் வெளியிடப்படும் நிலையில் 2025 ஆம் ஆண்டின் 11 வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் வழக்கம் போல சன் டிவி சீரியல்கள் முதல் இடத்தை தக்க வைத்தாலும் அதற்கு டப் கொடுக்கும் விதமாக விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சீரியல்கள் போட்டி போடுகின்றன.
அதன்படி இந்த வாரத்திற்கான டாப் 10 சீரியல்களில் பத்தாவது இடம் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் 2 சீரியல் பிடித்துள்ளது. இந்த சீரியல் 6.41 டிஆர்பி புள்ளிகளை பெற்று பத்தாவது இடத்தை பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பான அய்யனார் துணை சீரியல் டாப் 10 ரேஸில் முதல்முறையாக உள் நுழைந்துள்ளது. இந்த சீரியல் கடந்த வாரம் முதல் 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிலையில் டிஆர்பி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. அதே சமயம் எப்போதும் முன்னிலையில் இருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிலையில் 5.37 டிஆர்பி ரேட்டிங் பெற்று 15ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த வாரம் 10வது இடத்தில் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வாரம் எட்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த சீரியலுக்கு மொத்தம் ஏழு டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஏழாவது இடத்தை சன் டிவியின் அன்னம் சீரியல் 7.13 புள்ளிகளை பெற்று தக்க வைத்துள்ள நிலையில் அடுத்ததாக 7.50 டிஆர்பி புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்தை எதிர்நீச்சல் 2 சீரியல் பிடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து முதல் ஐந்து இடங்களில் நான்கு இடங்களை வழக்கம் போல சன் டிவி சீரியல்கள் ஆக்கிரமித்துள்ளன. ஐந்தாவது இடத்தை விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் பிடித்துள்ளது. கடந்த வாரம் ஆறாவது இடத்தில் இருந்த இந்த சீரியல் தற்போது பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அடுத்ததாக 8.28 புள்ளிகளைப் பெற்று மருமகள் சீரியல் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
அடுத்ததாக கடந்த வாரம் இரண்டாம் இடத்தில் இருந்த மூன்று முடிச்சு சீரியல் இந்த வாரம் 9.46 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதனைப் போலவே கடந்த வாரம் மூன்றாம் இடத்தில் இருந்த கையல் சீரியல் 9.72 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. வழக்கம்போல இந்த வாரமும் சிங்க பெண்ணே சீரியல் 9.93 புள்ளிகள் உடன் முதலிடத்தை தக்க வைத்துள்ளது.