விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. ஒரு குடும்ப தலைவியின் கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த சீரியல்களுக்கு குடும்பத் தலைவிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த சீரியலை இளைஞர்களும் அதிகம் விரும்பி பார்க்கத் தொடங்கி விட்டனர். குடும்பத்தில் எந்த ஒரு சண்டை வந்தாலும் தனி ஆளாக நின்று குடும்பத்தை தாங்கி பிடித்து பாக்கியா எல்லாத்தையும் சமாளித்து வருகின்றார். கோபி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தனது முதல் குடும்பத்தை விட்டுச் சென்ற போதும் அனைவரையும் தாங்கி பிடித்தார் பாக்யா. அதன் பிறகு கோபியை இரண்டாவது திருமணம் செய்த ராதிகா விவாகரத்து செய்துவிட்டு விலகிப் போன நிலையில் கோபி பாக்கியாவின் வீட்டிற்கு வந்திருந்தார்.
ஆனால் பாக்கிய அடுத்த பிரச்சினைகள் வந்த போது கோபியை மீண்டும் வீட்டை விட்டு துரத்தினார். கோபியோடு ஈஸ்வரியும் தற்போது வீட்டை விட்டு கிளம்பி போய் உள்ளார். அதனைப் போலவே இனியா பாக்யாவின் தோழியான செல்வியின் மகனை காதலிக்கும் விஷயமும் குடும்பத்திற்கு தெரிய வந்து பெரும் பஞ்சாயத்து நடந்தது. இதனைத் தொடர்ந்து பாக்யா சொன்னதற்கு ஏற்றது போல இனியா தன்னுடைய காதலன் ஆகாஷிடம் பேசாமல் படிப்பை முடித்துவிட்டு தற்போது வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இந்த நேரத்தில் சுதாகர் என்ற ஒரு தொழிலதிபர் பாக்யா வைத்து நடத்தும் ரெஸ்டாரண்டை தனக்கு தரும்படி மிரட்டும் நிலையில் பாக்யா முடியாது என அவரை விரட்டி அடிக்கிறார். பாக்கியாவை விரட்ட சுதாகர் பிளான் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் பாக்யாவிற்கு இனியா என்ற ஒரு மகள் இருப்பது தெரிய வருகிறது. மறுபக்கம் கோபி, ஈஸ்வரி மற்றும் செழியன் மூன்று பேரும் சேர்ந்து இந்தியாவிற்கு திருமண ஏற்பாடுகள் செய்ய பெரிய பணக்கார வீட்டில் தான் இனியாவை திருமணம் செய்து கொடுப்பேன் என்று கோபி சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இப்படியான நிலையில் கோபி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சதீஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாக்கியாவுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். இதனால் பாக்கியாவிற்கு பிரச்சனையாக வந்த சுதாகர் தன்னுடைய மகனுக்கு கோபியின் மூலம் இனியாவை பெண் கேட்பார் என்று தெரிகிறது. இதன் மூலம் பாக்கியாவின் ரெஸ்டாரண்டை தன்னுடைய பெயருக்கு வாங்க முடியும் என அவர் பிளான் போடுவார் போல தெரிகின்றது. இதனால் இனி இனியாவின் திருமணம்தான் அடுத்த பரபரப்பை ஏற்படுத்த போகிறது எனவும் விரைவில் சீரியல் முடிவுக்கு வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.