தினமும் வெறும் 10 ரூபாய் எடுத்து வைங்க போதும்.. உங்களையும் லட்சாதிபதியாக்கும் சூப்பரான முதலீடு திட்டம்..!!

By Nanthini on புரட்டாதி 8, 2024

Spread the love

இன்றைய காலகட்டத்தில் பணத்தை சேமிக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் சிந்திக்கின்றனர். எவ்வளவு சம்பாதித்தாலும் சேமிக்கும் பழக்கம் இல்லை என்றால் எதிர்காலத்தில் சில சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். பலரும் தங்களின் வருமானத்தை ஏதாவது ஒரு முறையில் சேமித்து வைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். குறிப்பாக வங்கி சேமிப்பு, எல் ஐ சி மற்றும் போஸ்ட் ஆபீஸ் உள்ளிட்ட திட்டங்களில் அதிக அளவு முதலீடு செய்து வருகின்றன.

   

அப்படி டெபாசிட் செய்வதற்கு சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் சிறந்த தேர்வாக இருக்கும். எஸ்ஐபி மூலமாக மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வது தான் இதன் நோக்கம். இதில் ஒருவர் முதலீடு செய்யும் போது கூட்டுத்தொகையின் பலனையும் நீண்ட காலத்திற்கு அதிக வருமானமும் பெற முடியும்.

   

 

இதில் முதலீடு செய்ய ஒவ்வொருவரும் பத்து ரூபாய் எடுத்து வைத்தால் மட்டுமே போதுமானது. இதனை ஒவ்வொரு மாதமும் 300 ரூபாயாக முதலீடு செய்யும்போது ஒவ்வொரு ஆண்டும் முதலீட்டை 10 சதவீதம் வரை வளர்த்துக் கொள்ளலாம். இதன் மூலமாக நீங்கள் அடுத்த 30 ஆண்டுகளில் 45 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும்.

இந்த டெபாசிட்டின் படி முதலீடு 5,92,000 ஆகும். இருந்தாலும் அதிக பலனை நீங்கள் பெறலாம். மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு சிறந்த தேர்வாக எஸ்ஐபி இருக்கும். இந்தியாவில் எஸ்ஐபி முதலீட்டை அதிகமானோர் விரும்புகிறார்கள். ஏனென்றால் குறைந்த அளவில் இதில் முதலீடு செய்து பெரிய அளவிலான லாபத்தை நீங்கள் பெற முடியும்.