விநாயகர் சதுர்த்தியை குடும்பத்துடன் கொண்டாடிய திரை பிரபலங்கள்.. வெளியான அழகிய புகைப்படங்கள்..!

By Nanthini on புரட்டாதி 8, 2024

Spread the love

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடை உடுத்தி விநாயகர் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தனர். தங்கள் வீடுகள் மற்றும் பொது இடங்களில் கலர் கலரான விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வழிபாடு செய்தனர். அதனைப் போலவே சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் வீடுகளில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர். அது தொடர்பான புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

   

நயன்தாரா- விக்னேஷ் சிவன்

   

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது இரட்டை குழந்தைகளுடன் வீட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடியுள்ளார். சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் தனது குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கி வரும் நயன்தாரா விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய புகைப்படம் வெளியாகி உள்ளது.

 

சந்தீப் கிஷன்:

ராயன் திரைப்படம் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் இடம் பிடித்துள்ள நடிகர் சந்திப் கிஷன் தனது குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்து அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து.

நடிகை பாவனி:

சின்னத்திரையில் நுழைந்து தற்போது வெள்ளி திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகை தான் பாவனி. இவர் தனது வீட்டில் நடிகர் அமீருடன் சேர்ந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.

சினேகா:

தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று அனைவராலும் கொண்டாடப்படும் நடிகை சினேகா சமீபத்தில் விஜயுடன் கோட் திரைப்படத்தில் நடித்து கலக்கினார். தற்போது அவர் தனது வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய புகைப்படம் வெளியாகி உள்ளது.

நடிகர் அல்லு அர்ஜுன்:

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் அல்லு அர்ஜுன் தனது குடும்பத்தினருடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய புகைப்படங்கள்.

அட்லீ – பிரியா:

தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குனரான அட்லீ தனது மனைவி மற்றும் மகனுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய  அழகிய புகைப்படம்.