தமிழ் திரையுலகில் பாடகியாக வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார். இவரும் நடிகர் கார்த்திக் குமாரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். பாடகியாக நல்லபடியாக சென்று கொண்டிருண்ட சுசித்ராவின் வாழ்க்கையில் அடுத்தடுத்து பல சர்ச்சைகள் எழுந்தன.
2017 ஆம் ஆண்டு சுசித்ரா சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பல முன்னணி நடிகர், நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் வெளியாகின. இதையெல்லாம் சுசித்ராதான் வெளியிட்டார் என்று சொல்லப்பட்டது. ஆனால் சுசித்ராவோ அந்த வீடியோக்களை நான் வெளியிடவில்லை. இன்னும் சொல்லப் போனால் அதில் இருக்கும் ஒரு வீடியோவைக் கூட நான் பார்த்தது இல்லை எனக் கூறி அதிர்ச்சியை கிளப்பினார்.
4.5லட்சம் ஃபாலோவர்களை கொண்ட தனது ட்விட்டர் பக்கத்தை யாரோ ஹேக் செய்து இதுபோன்ற சதி வேலையில் ஈடுபட்டு இருப்பதாகவும் சுசித்ரா குற்றம்சாட்டியிருந்தார். அதையடுத்து அவருக்கு மனநலம் சரியில்லை என அவரின் அப்போதைய கணவர் கார்த்திக்குமார் குற்றம் சாட்டினர். பின்னர் இருவரும் பிரிந்தனர்.

suchithra with dhanush
நடிகர் தனுஷின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருந்த சுசித்ரா அவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டை வைத்தார். மேலும் தன் கையில் ஏற்பட்டிருந்த காயங்களை புகைப்படமாக வெளியிட்டார். அதன் பின்னர் பலமுறை அவர் நேர்காணல்கள் அளித்த போதும் தனுஷை திட்டி பேசியிருந்தார்.
கொஞ்ச நாட்களாக அமைதியாக இருந்த அவர் இப்போது தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து விவகாரம் தொடர்பாக ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். இது சம்மந்தமாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், “இந்த விவகாரத்தில் எல்லோருடைய சிம்பதியும் தனுஷ் மேல்தான் உள்ளது. ஏனென்றால் ஐஸ்வர்யா ஒரு நல்ல அம்மா கிடையாது. ஒரு அம்மாவாக அவர் எதையும் செய்யவில்லை. தன்னைதான் ப்ரமோட் செய்துகொண்டார்.
தனுஷுக்கும் எனக்கும் தனிப்பட்ட பிரச்சனை உள்ளது. அதற்காக நான் அவரின் கையை காலை உடைத்துவிட்டு ஜெயிலுக்கு செல்லவும் தயாராக இருக்கிறேன். ஆனால் தனுஷ் என் ஜென்ம விரோதி கிடையாது. இந்த விவகாரத்தில் தனுஷ் பக்கம்தான் நியாயம் உள்ளது.” எனக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
