பிரபல நாட்டுப்புற மற்றும் பக்தி பாடகி மைதிலி தாக்கூர் 2025 பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு நேற்று பாட்னாவில் பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். பீகார் பாஜக தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் முன்னிலையில் அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மைதிலி தாக்கூர் போஜ்புரி, ஹிந்தி மற்றும் பிற பிராந்திய மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் அதைவிட பெரும் பாக்கியம் வேறு எதுவும் இருக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் பிரபல பாடகி பாஜகவில் இணைந்துள்ளது அரசியலில் உன்னிப்பாக பார்க்கப்படுகிறது.
